கொரியா பகுதியில் போர் ஏற்படலாம் என்ற பதட்டநிலை தோன்றியுள்ளது குறித்து ரஷ்யா, “அமெரிக்கா அந்தப் பகுதியில் போர் விமானங்களை பறக்க விடுததை தவிர்க்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளது.
கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்க, தென்கொரிய கூட்டு ராணுவ போர் ஒத்திகை நடைபெறுவது, அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் ஒத்திகையில் அரு நாட்டு விமானப்படைகளின் குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அதையடுத்து வடகொரியா, அமெரிக்க இலக்குகளை தாக்குவதற்காக தமது ராக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் அங்கு போர் மூளுமா என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் வடகொரியாவின் ‘நண்பன்’ என அறியப்பட்ட ரஷ்யா, அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, வடகொரியா அருகில் ராணுவ ஒத்திகை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “வடகொரியா அருகில் குண்டு வீச்சு விமானங்களை பயிற்சியில் ஈடுபடுத்துவதால், ஏதாவது தவறு ஏற்படும் பட்சத்தில் நிலைமை விபரீதத்தை உருவாக்கி விடலாம். வடகொரியாவும் நிதானம் காக்க வேண்டும். இருதரப்பிலும் ராணுவ வலிமையை காட்டுவதை தவிர்த்து போர் அபாயத்தை தவிர்க்க வேண்டும்” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment