அமெரிக்கா, தென் கொரியா, மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்குவதற்காக ராக்கெட்டுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன்.
நேற்று (வெள்ளிக்கிழமை) வட கொரிய தலைநகரில் ஜனாதிபதி, ராணுவ தளபதிகளுடன் நடத்திய அவசர ஆலோசனையை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய அரசின் செய்தி ஏஜென்சி KCNA வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நேற்று நள்ளிரவு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவில் கையெழுத்து போட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜனாதிபதி நினைக்கிறார். ராக்கெட்டுக்கள் ஏவப் படுவதற்கான தொழில்நுட்ப முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் அவர்.
அமெரிக்காவின் பகுதிகள், வடகொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், மற்றும் பசுபிக் பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது எந்த நிமிடத்திலும் வட கொரிய ராக்கெட்டுகள் ஏவப்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
-viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment