உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல் “பெண்களின் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக பொதுக்கூட்டம், பேரணி, கருத்தரங்கம், மற்றும் கட்டுரைபோட்டிகள் நடந்தன.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் NWF சார்பாக நடத்தப்பட்டன.
* நெல்லை மேற்கு மாவட்ட NWF சார்பாக கடையநல்லூரில் மாபெரும் கருத்தரங்கம் 10/03/2013 அன்று நடைபெற்றது.
பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்,பாலியல் மற்றும் வன்முறை காட்சிகளைக் கொண்ட சினிமா, நாடகம், மற்றும் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள்,
முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்குவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கலை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டரத்தை சேர்ந்த 300 பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
* தேனி மாவட்ட NWF சார்பாக மாவட்ட தலைவர் ரகுமத்நிஷா தலைமையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
சின்னமனூரில் முதியோர் இல்லத்தில் 20 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
உத்தமபாளையத்தில் முதியோர் இல்லத்தில் 20 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
கம்பத்தில் அரசு மருத்துவமனையில் 40 நோயாளிகளுக்கு பிஸ்கட் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது.
* மதுரை மாவட்ட NWF சார்பாக ரயில் நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாத்திமா கனி மனித சங்கிலி போராட்டத்திற்கு தலைமை ஏற்றார்.இம்மனித சங்கிலி போராட்டத்தில் கல்லூரி பெண்கள் உட்பட பல தரப்பு பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை நடத்திய நேஷனல் விமன்ஸ் ஃபிரண்டின் நிர்வாகிகளை அப்பகுதி காவல் உதவி ஆய்வாளர் பாராட்டினார்.
* கோயம்புத்தூர் மாவட்ட NWF சார்பாக கோவை மாநகராட்சி அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி அருகில் நடைபெற்ற இக்கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி பெண்கள் உட்பட பல தரப்பு பெண்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், நேஷனல் விமன்ஸ் ஃபிரண்டின் இத்தகைய முயற்சியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
* நெல்லை மாவட்டம் பளையங்கோட்டையில் NWF சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கம், நெல்லை மாவட்ட செயலாளர் நுஸ்ரத் தலைமையில் நடைபெற்றது. பாளை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இக்கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி பெண்கள், ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பல தரப்பு பெண்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
* திருப்பூர் மாவட்டத்தில் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாத்திமா தலைமை தாங்கினார். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா மற்றும் SDPI கட்சியின் அறிவொளி நகர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜமீலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் நஃபீஷா பானு சிறப்புரையாற்றினார்.நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
* சேலத்தில் கையெழுத்து இயக்கம் சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே நடைபெற்றது.சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் நடைபெற்ற இக்கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி பெண்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
*தெற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையில் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலிமா, K.T.P மருத்துவமனை டாக்டர் பிரியா ராஜேஷ் மற்றும் மதுக்கூர் JCI மண்டல பயிற்சியாளர், தலைவர் கனிமொழி குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
*சென்னை மாவட்டத்தில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை சென்னை மாவட்ட தலைவர் அஹமது மல்லிகா துவங்கி வைத்தார்.இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் வெறுமனே இத்தினத்தை கொண்டாடுவதினால் மட்டும் பெண்களை கண்ணியப்படுத்திவிட்டதாக ஆகிவிடாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை களையும் வகையில் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து பெண் சமூகத்தை பாதுகாக்கவேண்டும்.
இக்கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி பெண்கள் உட்பட 1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment