தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினர்களாக எம்.பி.கள் ஜெ.எம்.ஆரூண் முகமது ஜின்னா ஆகியோரும் எம்.எல்.ஏ.க்கள் ரகீம், முகமது ஜான் (அமைச்சர்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து தமிழ் மகன் உசேன்னை வக்பு வாரியத்தின் தலைவராக தேர்வு செய்திருந்தனர்.
இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ. ஜவாகருல்லா, வக்கீல் அப்துல்ரஹ்மான் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டும் இருந்தால் அவர்களை எந்த தேர்தலும் நடத்தாமல் வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமனம் செய்யலாம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் 3 எம்.பி.க்களும், 5 எம்.எல்.ஏ.க்களும் இருக்கும் நிலையில் தேர்தல் நடத்திதான் தலா 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால், அந்த தேர்தலை நடத்தாமலேயே எம்.பி.க்கள் 2 பேரையும், எம்.எல்.ஏ.க்கள் 2 பேரையும் உறுப்பினராக வக்பு வாரியத்தில் நியமித்துள்ளனர். மேலும் அமைச்சராக இருப்பவர் உறுப்பினராக முடியாது. ஏதாவது ஒரு பதவியை தான் அவர் வகிக்க வேண்டும். எனவே, வக்பு வாரிய விதிகள் மீறி நடத்தப்பட்ட உறுப்பினர் நியமனங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் பானுமதி, ரவிச்சந்திர பாபு ஆகியோர் விசாரித்தனர். உறுப்பினர்கள் 4 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து அவர்கள் உத்தர விட்டனர். இந்த 4 உறுப்பினர்களும் சேர்ந்து தமிழ் மகன் உசேனை தலைவராக தேர்தெடுத்தது செல்லாது என அறிவித்தனர். மேலும் முகமது ஜான் அமைச்சர் அல்லது உறுப்பினர் பதவி ஏதாவது ஒன்றில் தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வக்பு வாரியத்தின் உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலை இன்னும் 2 மாதத்திற்குள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்
0 கருத்துரைகள்:
Post a Comment