Saturday, March 30, 2013

இலங்கையில் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்கள் மீது தாக்குதல் : பாப்புலர் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்


இலங்கையில் ஆளும் சிங்கள பௌத்த அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்து முஸ்லீம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு , ஹலால் முத்திரை நீக்குதல் , முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல் பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது .


அதன் தொடர்ச்சியாக இலங்கை கொலும்புவில் உள்ள பெபிலியானாவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug நிறுவனத்திற்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், பாசிஸ வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர். 

பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்த நிறுவனத்தின் CCTV கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையறிந்த போலிஸார், Fashion Bug நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு CCTV இல் பதிவான வீடியோ காட்சிகளை எந்தவொரு ஊடகத்திற்கும் வழங்க வேண்டாமெனவும், இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாமெனவும் அச்சுறுத்தியுள்ளதாகவும் , பௌத்த பிக்குகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஊழியர்களை தாக்கும் காட்சிகளும் சேதம்விளைவிக்கும் காட்சிகளும் மிகவும் தெளிவாகவே பதிவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லீம்களை துடைத்தெறிய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு அநியாயங்களை செய்து வரும் பாசிஸ சிந்தனை கொண்ட பௌத்த பயங்கரவாதிகளையும் , இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிப்பதோடு மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது .

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza