பரமக்குடி ஒன்றியம் தோளூர் கிராமத்தில் திடீரென இன்று (25.03.2013) விஷக்காய்ச்சல் பரவியது. சுமார் 40க்கும் அதிகமானோர் இந்த விசக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோளூர் கிளை தலைவர் ஜீவா தலைமையில் முதலுதவி பணிகள் முடுக்கி விடப்பட்டன. அனைத்து ஆம்புலன்சுகளும் தோளூர் விரைந்தன
மேலும் இச்சம்பவத்தை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் பரமக்குடி தொகுதி துணைத்தலைவர் சீதக்காதிர்,செயலாளர் அப்துல்லா சேட், பரமக்குடி மேற்கு கிளை தலைவர் முருகன்,செயலாளர் லோக செல்வம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட தோளூர் கிராம மக்களினை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்துவ உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய முறையில் விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.
இதனை யடுத்து மருத்துவ குழுவினரும் உடனடியாக முதலுதவிகளை செய்து சிகிச்சை மேற்கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் இந்த சேவையினை அரசு மருத்துவ அதிகாரிகளும்,தோளூர் கிராம மக்களும் பாரட்டினர்.
மேலும் பாதிக்கப்பட்ட அக்கிராமத்தினை ஆய்வு செய்யும் விதமாக அரசு மருத்துவ குழுவினருடன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மருத்துவ அணியினரும் உடன் செல்கின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment