மிலான், இத்தாலி: இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவரும், இந்தியா வருகின்றனர். “இந்தியாவில் நடைபெறும் கொலை வழக்கு விசாரணைக்கு 2 இத்தாலிய கடற்படை வீரர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்றிரவே விமானம் ஏறுகின்றனர்” என்று இத்தாலிய அரசு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய கடல் எல்லைப் பகுதியில் 2 இந்திய மீனவர்களை வெளிநாட்டு பயணிகள் கப்பலின் பாதுகாப்புப் பணிக்கு வந்த 2 இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கொச்சியில் கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தாலியில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்காக 2 இத்தாலிய வீரர்களும் அந்நாட்டு தூதரின் உறுதிமொழி பத்திரத்தின்பேரில் இத்தாலி செல்ல உச்சநீதிமன்றம் 4 வார காலத்துக்கு அனுமதி அளித்திருந்தது. அவர்கள் இத்தாலிக்குச் சென்றபின், இந்தியாவில் நடைபெறும் கொலை வழக்கு விசாரணைக்குத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்று இத்தாலி அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள இத்தாலிய தூதர் நாட்டைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இத்தாலிய வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்காவிட்டால், இந்தியாவுக்கான இத்தாலிய தூதர், இந்தியாவை விட்டு வெளியேற முடியாது என இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இத்தாலி இறங்கி வந்திருக்கிறது.
source: viruvirupu
0 கருத்துரைகள்:
Post a Comment