எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு நேற்று (09.03.2013)திருச்சியில் துவங்கியது.திருச்சியில் எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்
இதில் கடந்த 2 ஆண்டுகளில் கட்சியின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கையை மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.ஆய்வறிக்கை சம்பந்தமாக பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாநில நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
இதன் பிறகு புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கேரளா மாநில தலைவருமான வழக்கறிஞர் அஷ்ரஃப் இத்தேர்தலை நடத்தினார்.
தேசியத் தலைவர் இ.அபூபக்கர் தேர்தல் முடிவுகளை வெளியிட்டார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடுத்த 2 ஆண்டுக்கான மாநில நிர்வாகிகள்
மாநிலத்தலைவர்: K.K.S.M.தெஹ்லான் பாகவி-நெல்லை
மாநில துணைத்தலைவர்: S.M. ரஃபீக் அகமது-தேனி
மாநில பொதுச்செயலாளர்கள்: 1.M.முஹம்மது முபாரக் - நெல்லை
2.B.அப்துல் ஹமீது- இராமநாதபுரம்
3.M.நிஜாம் முஹைதீன் - செங்கோட்டை
மாநில செயலாளர்கள்: 1. அமீர் ஹம்ஸா-சென்னை
2.நாஞ்சில்A.செய்யது அலி-கன்னியாகுமரி
3. V.M.அபுதாஹீர்-கோவை
4.T.ரெத்தினம்-சென்னை
5.அப்துல் சத்தார்-தஞ்சை
மாநில பொருளாளர்: A.அம்ஜத்பாஷா-சேலம்
மாநில செயற்குழு உறுப்பினர்கள்:
வழக்குரைஞர் அப்பாஸ்-மதுரை
k.செய்யது இப்ராஹீம்- மதுரை
s. ஃபாத்திமா கனி- மதுரை
உஸ்மான்கான்- நெல்லை
0 கருத்துரைகள்:
Post a Comment