இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய ஆதரிக்க வேண்டும், சர்வதேச போர்குற்றவாளி என்று ராஜ பக்சேயை அறிவிக்க வேண்டும், இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும்,இலங்கையில் ஏற்பட்ட மனித உரிமை மீறலை கண்டித்தும்,
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ கட்சி)வின் சார்பாக இன்று இராமநாதபுரம் கேணிக்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொது செயலாளர் செய்யது ஹாலிது, தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பைரோஸ்கான், சோமு, மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இராமநாதபுரம் நகர் செயலாளர் அன்வர்தீன் வரவேற்றார். புதுவலசை பைசல் தொகுத்து வழங்கினார்.
மாவட்ட செயலாளர் செய்யது இபுராஹீம், அப்துல் ஜமீல், எஸ்.டி.டி.யூ. ஒருங்கிணைப்பாளர் கார்மேகம், செயற்குழு உறுப்பினர் ஜெய வீர சிங்கம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ் கான், முதுகுளத்தூர் தொகுதி தலைவர் இஷ்ஹாக்,செயலாளர் காஜா, திருவாடனை தொகுதி தலைவர் சஹிருதீன், செயலாளர் ரியாஸ் அஹமது, துணை தலைவர் முருகேசன்,சலீம், இராமநாதபுரம் தலைவர் அப்பாஸ் ஆலிம், செயலாளர் சேகு இபுறாஹீம், உட்பட தொகுதி, நகர், கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் 100 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இறுதியாக, இராமநாதபுரம் நகர் கமிட்டி உறுப்பினர் முகமது இபுறாஹீம் நன்றி கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment