Monday, March 25, 2013

முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட தீவிரவாத வழக்குகளில் விரைவில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்கள்!

INDIA-BRITAIN-RELIGION-PROTEST
புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்கள் கைதுச்செய்யப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். நிரபராதிகளை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கும் புலனாய்வு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.
முஸ்லிம்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்குகளை பரிசோதிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், குற்றவாளிகளாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்எழுதியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஷிண்டே கூறியது: நிரபராதிகளை காவலில் வைப்பது கடுமையான குற்றம். இத்தகைய சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இழப்பீடு வழங்க ஒவ்வொரு வழக்கையும் தனியாகபரிசோதிக்கவேண்டும். புலனாய்வு ஏஜன்சிகளின் திறமை குறைவும், ஆதாரங்கள் இல்லாமையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாக காரணமாகிறது. நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடலாம். குற்றவாளிகளான அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 211-வது பிரிவின் படி நடவடிக்கை எடுக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள்கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிரபராதிகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்தால் மாநில அரசுகள் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.
முன்னர் அமைச்சர் ரஹ்மான் கான் எழுதிய கடிதத்தில், 10 மற்றும் 14 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக கண்டறிந்து நீதிமன்றங்கள் விடுவித்த சம்பவங்களை கான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகையால் வழக்குகளை ஒருவருடத்திற்குள் தீர்ப்பளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், சிறப்பு நீதிமன்றங்கள் எப்பொழுது அமலுக்கு வரும் என்பதை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தவில்லை. நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களில் தலையிடமுடியாது என்று ஊடகங்களிடம் கூறிய ரஹ்மான் கான், பாதுகாப்பின் பெயரால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்றார்.
தீவிரவாதம் தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் தனியாக ஆராயவேண்டும் என்று அவர் மேலும் கூறினார். ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைதுச செய்யப்பட்டிருந்தனர். டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பதிவுச் செய்த 16 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. கைதுச் செய்யப்பட்ட அப்பாவிகள் 10 வருடங்களுக்கும் அதிகமாக அநியாயமாக சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.அண்மையில் பெங்களூர் தீவிரவாத வழக்கில் கைதுச் செய்யப்பட்ட டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி இஜாஸ் செய்யத் மிர்ஸா மற்றும் டெக்கான் ஹெரால்டில் பத்திரிகையாளரான முதீவுற்றஹ்மான் சித்தீகி ஆகியோரை நீதிமன்றம் விடுவித்திருந்தது. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவிகள் கைதுச் செய்யப்பட்டு பல மாதங்கள் சித்திரவதை அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.இவ்வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் குற்றவாளிகள் என்பது பின்னர் நிரூபணமானது.
மேற்கண்ட சம்பவங்களைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் மீது அநியாயமாக தொடுக்கப்படும் தீவிரவாத வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. கடந்த மாதம் 2-ஆம் தேதி இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ரஹ்மான் கானை சந்தித்தனர்.
-thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza