கடந்த இரு தினங்களில் கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்குட்பட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சி மடம் பகுதியை சார்ந்த 53 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து,அவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.இதில் 12 வயது சிறுவனும் அடக்கம்.
இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது ஹாலிது தலைமையில் இன்று தங்கச்சி மடம் விரைந்தனர்.பாதிக்கப்பட்ட மீனவகுடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் ,மீனவ அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் அக்குடும்பங்கள் சந்தித்துள்ள நெருக்கடியான நிலையினை விபரமாக எடுத்து கூறினர்.
மேலும் மத்திய அரசு உடனே இந்த விசயத்தில் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மாவட்ட துணைத்தலைவர் ஃபைரோஸ்கான்,மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல்,இராமநாதபுரம் தொகுதி இணைச்செயலாளர் அலாவுதீன்,பொருளாளர் அப்துல் ரஹ்மான்,மண்டபம் நகர் தலைவர் அபுலா,இணைச்செயலாளர் அன்வர்,மாவட்ட செய்தி ஊடக பொருப்பாளர் அப்பாஸ் ஆகியோர் உடனிருந்தனர்
0 கருத்துரைகள்:
Post a Comment