SDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது…..
2009-ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது….குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என லட்சக்கனக்கானோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரணடைந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப் பட்டனர்…
இறுதிப்போருக்கு பிறகும் மனித உரிமை மீறல்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் காணாமல் போகும் அவலமும் தொடர்கின்றது….
இந்நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா வின் மனித உரிமை கூட்டத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே மற்றும் இலங்கை அரசின் மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும்,அத்துடன் தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் , அமைப்புகளை சேந்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என போராட்டக்களம் வலுவடைந்து வருகின்றது. அகிம்சை வழியில் பிரவாகம் எடுத்து வரும் மாணவர் போராட்டத்தை மாநில அரசு ஒடுக்க முனைவது கண்டிக்கதக்கது.
இத்தாலி மற்றும் பிற நாடுகள் தொடர்பான பிரச்சினைகளில் கடுமை காட்டும் இந்திய அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த மேலும் 600 தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை மீது மட்டும் கரிசனத்தோடு நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது.இலங்கைக்கு எதிராக சர்வேதேச விசாரணை நடத்தப்படுவதற்கும் ,பொது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கும் ஏற்ற வகையில் அமெரிக்க தீர்மானத்தை திருத்துவதற்கு இந்தியா முயற்ச்சிக்க வேண்டும்.
மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு தலை வணங்க வேண்டும். இனப்படுகொலைக் கெதிரான போராட்டங்களை SDPI ஆதரிக்கிறது…. வரவேற்கிறது….
நாளை மாணவர்கள் நடத்த திட்டமிட்டுள்ள மாணவர் போராட்டத்தை மாணவர் அமைப்புக்களுடன் இணைந்து SDPI கட்சி வலுப்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்…
0 கருத்துரைகள்:
Post a Comment