:தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படும் என்ற மத்திய அரசின் அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது. அதேவேளையில் சிறையில் வாழ்க்கையை வீணடிக்கப்படும் நூற்றுக்கணக்கான அப்பாவிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வு என்பது குறித்து சந்தேகத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச்ச்செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பது: 50 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை விசாரணைக்கைதிகளாக உள்ளனர். சிறப்பு நீதிமன்றங்களை நிறுவினால் கூட இவ்வழக்குகளை முடிக்க பல வருடங்களாகும் என்பதை கடந்த கால வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஒரு சாரார் மீது வெறுப்புணர்வை அடிப்படையாக கொண்ட தேசவெறிப் பிடித்த மீடியாக்களுடன் சேர்ந்து போலீஸ் மற்றும் புலனாய்வுத்துறையைச் சார்ந்தவர்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாகும்.
அண்மையில் ஹைதராபாத்தில் நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்பும், முன்னாள் கஷ்மீர் போராளி கைதுத் தொடர்பாக கஷ்மீர் போலீசுக்கும், டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீசுக்கும் இடையே ஏற்பட்ட சில்லறைச் சண்டையும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து கைதுச் செய்யும் புலனாய்வு ஏஜன்சிகளின் விருப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கறுப்புச் சட்டங்களின் மூலம் போலீசுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கியதே இதற்கு காரணம். நிரபராதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்றால் அவர்களை ஜாமீனில் விடுதலைச் செய்து கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு ஒ.எம்.அப்துல் ஸலாம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment