Tuesday, March 19, 2013

இலங்கையில் தமிழக மக்களுக்கு நடந்த மனித உரிமை மீறலை கண்டித்து இராமநாதபுரத்தில் அரண்மனையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்-எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்பு


மார்ச் 18 காலை 9 மணி  அளவில் இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், ராஜா பக்சேயை சர்வதேச போர் குற்றவாளி என்று  அறிவிக்க கோரியும், இலங்கை சம்பந்தமான ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இராமநாதபுரத்தில் அரண்மனையில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சி, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி ,மற்றும் மாணவர்கள் இயக்கமான கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா  ஆகியவை  இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ் கான், மாவட்ட செய்தி தொடர்பாளர் அப்பாஸ், திருவாடனை தொகுதி தலைவர் சஹீருதீன், துணை தலைவர் முருகேசன், செயலாளர் ரியாஸ் அஹமது, இணை செயலாளர் ஹக், இராமநாதபுரம் தொகுதி துணை தலைவர் மூர்த்தி, முதுகுளத்தூர் தொகுதி துணை தலைவர் Ex VAO.சித்திக், நகர் தலைவர் சுலைமான், துணை தலைவர் ஜான், செயலாளர் அன்வர், ஒம் சக்தி நகர் அஜ்மல் செரிப், பெரியபட்டினம் பஹது, புதுவலசை சலீம், வண்ணாங்குண்டு அஸ்கர், அழகன்குளம் நகர் தலைவர் ஜமீல், இணை செயலாளர் ஹிஜ்ரி, மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் உட்பட 100 - க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza