Tuesday, March 26, 2013

ஜனாதிபதி நாட்டைவிட்டு தப்பி ஓடினார்!! கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றினர்!!


மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர் தலைநகர் பாங்குய்யை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதை தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஃபிரான்கோய்ஸ் போஸிஸ் (François Bozizé) நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ராணுவப்புரட்சி மூலம் கடந்த 2003-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியவர் François Bozizé. ஆனால், நாட்டில் அமைதியான ஆட்சியை கொடுக்க அவரால் முடியவில்லை. கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இதன் உச்சமாக கடந்த ஓராண்டாக, கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வந்தது.
கடந்த ஜனவரி மாதம் அரசுத் தரப்புக்கும், கிளர்ச்சியாளர்கள் தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 ஆண்டுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த அமைதி ஒப்பந்தம் உருவானது. ஆனால் மோதல் நீடித்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் நேற்று தலைநகர் பங்குய் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றினர்.
கிளர்ச்சியாளர்கள் பலத்த எதிர்ப்பை சந்திக்கவில்லை. ராணுவம் சும்மா ஓரிரு தடவைகள் சுட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். ஜனாதிபதி மாளிகையையும் கிளர்ச்சியாளர்கள் வசமானது. ஆனால் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

source: viruviruppu

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza