Friday, March 29, 2013

பேட்டை பள்ளிவாசல் விவகாரம்:தொடர்ந்து பொய்யை பரப்புவது யார்?


நெல்லை மாவட்டம் பேட்டையையை நவாப் வாலாஜா  பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல கடைகள் ,மண்டபம்,வீடுகள் என பல இடங்கள் உள்ளன இவைகள் தொடர்ந்து சமுக விரோதிகளின் கையில் சிக்கி மாத வாடகையும் பள்ளிக்கு கிடைக்காமல் இருந்து வந்தது .இந்த பிரச்சினை பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அண்மையில் நீதிமன்றம் இடம் வக்ப் வாரியத்திற்கு (பள்ளி வாசலுக்கு) உரியது என தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் பள்ளியின் சொத்துக்கள் பள்ளிக்கே சொந்தம் என்றும் அதை உடனடியாக ஆக்கிரமிப்பாளர்கள் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் காலி செய்து விட்டு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்வதற்குள் எவ்விதமான கட்டிடங்களையும் இடிப்பது கூடாது என்றும் தீர்ப்பில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது, தீர்ப்பு இவ்வாறு இருந்தும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டிடம் ஒன்றை ஆக்கிரமிப்பாளர்கள் இடித்ததால் பேட்டை முழுவது ஒரு வித பரபரப்பிற்கு உள்ளாக்கப் பட்டது.
ஆனால் தீர்ப்பு வழங்கியும் முஸ்லிம்களில் கையில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தது மாவட்ட நிர்வாகம்.இதனால் கோபமுற்ற முஸ்லிம் அமைப்புகள் (பாப்புலர் ஃப்ரண்ட்,மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் , எஸ்.டி.பி.ஐ., உம்மத்தே முஸ்லீம் மற்றும் பல அமைப்புகள் )மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகளை  சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் மேலும் முதல்வரின்  கவனிக்கும் கொண்டு சென்றனர் .மேலும் இழுத்தடிப்பு செய்தால் போராட்டம் நடைபெறும் எச்சரிக்கை விடுத்தனர் முஸ்லிம் அமைப்புகள். இதனால் மாவட்ட வருவாய் துறை அதிகாரி,கோட்டசியர் 100 கோடிக்கு மேல் உள்ள நவாப் வாலஜா
 (வக்ப் வாரிய )சொத்துகளின் ஒரு பகுதியை முஸ்லிம் அமைப்புகளின் கொடுத்த அழுத்தத்தால்  ஜமாஅத் நிர்வாகிகளிடம் சொத்துகளை ஒப்படைத்தனர்.



முன்னதாக பள்ளிவாசல் சொத்துகள் முஸ்லிம்கள் கையில் கிடைத்துள்ளது பற்றி SDPI வெளியிட்ட சுவரொட்டி 
இதனை கண்டு இதுவரை சொத்துகளை ஆக்கிரமித்துள்ள ஸ்டாலின் பாண்டியனும் மேலும் பல வக்ப் செய்யப்பட்ட பள்ளிவாசல் சொத்துகளை ஆக்கிரமித்துள்ள  பல சமுக விரோதிகளும் தங்களுடைய சொத்துகளை பாதுகாக்க ஹிந்து முன்னணியை ஏவிவிட்டு ஒற்றுமையாக உள்ள ஹிந்து முஸ்லிம்களுக்கிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக பொய்யான செய்தியை பரப்பும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி கொண்டு வருகின்றனர் மேலும்  பாப்புலர் ஃப்ரண்ட் என்ற சமுதாய இயக்கத்தை பற்றி மிகவும் கேவலமான முறையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது (இந்த இயக்கம் இந்தியாவில் எங்கேயும் தடை செயய்ப்படவில்லை முறை படி அரசாங்கத்தில் பதிவு செய்து இந்தியா முழுவதும் சமுதாய சேவைகளை செய்து வருகிறது  
 பார்க்க :http://popularfrontindia.org/pp/page/constitution மற்றும் http://www.popularfrontnellai.com/2013/03/blog-post_7961.html)


இதனை கண்டிக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் காவல்துறை ஆணையரிடம் சென்று ஹிந்து முஸ்லிம்களுக்கிடையே கலவரத்தை தூண்ட முயற்சி செய்யும் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் ஹிந்து முன்னணி மீது  புகார் மனு அளித்துள்ளனர்.


மேலும் பள்ளிவாசல் இடத்தில்  இருப்பவர்கள் தொடர்ந்து அங்கேயே இருக்கலாம் என பள்ளிவாசல் நிர்வாகம் கூறியது ஆனால் வாடகை பணம் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு தான் கொடுக்க வேண்டும் எனக்கூறினர் அதருக்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர் ஆனால் சில குறிபிட்டவர்கள் மட்டும் ஸ்டாலின் பாண்டியன் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் சிலர் வாடகை பணத்தை பள்ளிக்கு தர மறுத்தனர் இதனால் அவர்களை பள்ளிவாசல் நிர்வாகம் வெளியேற கோரியது


மேலும் இப்பொழுது குடியேறி  வாடகை தர சம்மதம் தெரிவித்தவர்கள்  பெருபான்மை ஹிந்துக்களே உள்ளனர் ,ஆனால் வாடகை தர மறுத்தவர்களை ஹிந்துக்களாக காட்டி இந்த சம்பவத்தை ஹிந்து -முஸ்லிம் பிரச்சினையை உண்டாக்கி ,  அந்த சொத்துகளை சமுக விரோதிகளிடம் (ஸ்டாலின் பாண்டியன்)கையில் மீண்டும் சொத்துகளை கொண்டு சேர்க்க  ஹிந்து முன்னணி துடியோ துடின்னு குதிக்கிறது.(ஏன் ஒரு சொத்து பிரச்சினையை ஹிந்து-முஸ்லிம் பிரச்சினையாக்க ஹிந்து முன்னணி இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன் என்பது புரியவில்லை.ஹிந்து முன்னணி எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பது எங்களுக்கு கண்டிப்பாக தெரியாது

இந்த சம்பவத்தில் ஹிந்து முன்னணியில் உண்மை முகத்தை அறிய விரும்புவர்கள் அந்த இடத்திற்கு மேலே முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்  உள்ளன தொடர்பு கொள்ளவும் அல்லது நேரில் சென்று காணவும் நேரில் சென்று கண்டால் உண்மை அறியும் 




முதலில் ஹிந்து முன்னனினர் வெளியிட்ட சுவரொட்டி பிறகு உண்மையை விளக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்ட சுவரொட்டி 
பிறகு 2வது முறை ஹிந்து முன்னணியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஒட்டிய சுவரொட்டிக்கு எதிராக விஷம கருத்தை பரப்பும் விதமாக  ஹிந்து முன்னணி வெளியிட்ட சுவரொட்டி
பிறகு உண்மையை விளக்கும் விதமாக பள்ளிவாசல் நிர்வாகம் வெளியிட்ட சுவரொட்டி 
பத்திரிக்கையில் வந்த செய்தி 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza