எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.இதன் பிறகு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா வின் மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தை வலுசேர்க்கும் திருத்தங்களை கூட செய்ய மத்திய அரசு தயாராக இல்லை.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க எவ்வளவோ நிர்பந்தம் கொடுத்தும் செவி சாய்க்காத நிலையில் தற்போது மத்திய அரசிற்கு தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பையை தி.மு.க நிறைவேற்றியுள்ளதாக கருதுகிறேன். தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் இந்த முடிவை மக்கள் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிராக சர்வேதேச பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கை தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறும் மாணவர் போரட்டத்தை ஆதரிக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நாளை தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும்
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment