இராமநாதபுரம்: மார்ச் - 16 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நவாப் கிட்சன் ஹோட்டலில் ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட தலைவர் H. ஹபீப் நவாஸ் கான் அவர்கள் தலைமை தாங்கினார். புதுவலசை முஹம்மது பைசல் வரவேற்றார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். முஹம்மது யூசுப் அவர்கள் சட்ட விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துகளை வழங்கினார். ஜமாத்துகளின் முக்கியத்துவம் மற்றும் ஜமாத்துகள் மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகள் குறித்து மாநிலத்தலைவர் A.S. இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக சேவை குறித்து மாநில செயலாளர் A.முஹம்மது ரசீன் அவர்கள் உரையாற்றினார். இந்த நிகழச்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும், சக்கரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நூர் முஹம்மது அவர்களும், பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது கபீர் அவர்களும், மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட 100 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் S பரகத்துல்லாஹ் அவர்கள் நன்றி கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment