Wednesday, March 27, 2013

இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு முழு ஆதரவு- கேம்பஸ் ஃப்ரண்ட்


கேம்பஸ் ஃப்ரண்ட்!
சென்னை:தமிழ் இன மக்களை இனப்படுகொலைச் செய்த குற்றத்திற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றத்திற்காக விசாரணை நடத்தவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் நீர்த்துப்போன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.ந அவையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை.எனவே ஐ.நா அவையே ஒரு தீர்மானம் எடுத்து இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிக்க ஒரு சுதந்திரமான சர்வதேச குழுவை நியமிக்கவேண்டும். இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் முழு ஆதரவை அளிக்கும் என்று தேசிய செயற்குழு தெரிவித்தது.

சென்னையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய தலைவராக கேரளாவைச் சார்ந்த பி.அப்துல் நாஸரும், துணைத் தலைவராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஆதியா பிர்தவ்ஸும், பொதுச் செயலாளராக மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இனாமுல் ரஹ்மானும் தேர்வுச் செய்யப்பட்டனர். செயலாளர்களாக முஹம்மது ஷாகிர்(கர்நாடகா), சுகைப்(கேரளா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளர் கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த தல்ஹா ஹுஸைன் ஆவார்.
தமிழகத்தைச் சார்ந்த முஹம்மது தம்பி, சுல்தான் உள்பட ஒன்பது பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza