மியான்மர் - பர்மத் தலைநகரான மியான்மரில் வெடித்துள்ள கலவரத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் மூன்று வழிபாட்டுத்தலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
மியான்மரில் மெய்க்டிலா என்ற இடத்தில் ஒரு முஸ்லிமிற்குச் சொந்தமான நகைக் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கலவரமாக மாறியது. ஏறத்தாழ 200 பேர் தெருக்களில் சண்டையிட்டதில் ஒரு புத்தத்துறவி மற்றும் ஒரு முஸ்லிம் ஆகியோர் கொல்லப்பட்டனர். மூன்று மசூதிகள் எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் கலவரத்தினை அடுத்து அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகினே என்ற நகரில் ஏற்பட்டக் கலவரத்தில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேலான முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறினர்.
source: inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment