Tuesday, March 26, 2013

உலகின் சக்தி வாய்ந்த அரபுகள்!


உலகின் சக்தி வாய்ந்த அரபுகள்!துபாய் : ஒரு முன்ணணி வணிக பத்திரிகையில் வெளியாகியுள்ள 2013ம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அரபுகள் பட்டியலில் பல ஆச்சரியங்கள் உள்ளன.

அரபுலகில் வெளியாகும் அரேபியன் பிஸினஸ் எனும் வர்த்தக இதழ் வருடா வருடம் சக்தி வாய்ந்த அரபுகள் பட்டியலை வெளியிடும். இவ்வாண்டு வெளியாகியுள்ள பட்டியலில் கடந்த 9 வருடங்களாக முதல் இடத்தை பிடித்திருந்த கிங்டம் ஹோல்டிங் குழும தலைவரும் சவுதியின் இளவரசருமான அல் வலீத்தே முதலிடம் பிடித்துள்ளார். சிட்டி வங்கி மற்றும் ட்விட்டரில் குறிப்பிடத்தக்க ஷேர்களை அல் வலீத் வைத்துள்ளார்.


அல் வலீதை தொடர்ந்து எமிரேட்ஸ் ஏர்வேஸ், எமிரேட்ஸ் என்பிடி வங்கி, துபாய் வேர்ல்டு நிறுவனங்களின் தலைவரான ஷேக் அஹ்மத் பின் சயீத்தும் லண்டன் ஒலிம்பிக்கில் கடந்த ஆண்டு இரண்டு தங்க பதக்கங்களை வென்ற சோமாலியாவை பூர்வீகமாக கொண்ட மோ பராவும் இடம் பிடித்துள்ளார். உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்டிய எம்மார் குழும தலைவரான முஹமது அல் அப்பார் நான்காம் இடத்தையும் ட்விட்டரின் துணை தலைவரான மஸேன் ரவாஸ்தேஹு ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவ்வாண்டு வெளியாகியுள்ள 500 நபர்கள் பட்டியலில் 155 பேர் இப்பட்டியலுக்கு புதியவர்கள் என்பதும் அதிகபட்சமாக இவ்வாண்டு 155 பெண்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பெண்களில் முதலாவதாக அமீரக அமைச்சர் ஷேக்னா லுப்னா 12ம் இடத்தில் உள்ளார். அமீரகத்தில் வசிப்பவர்களில் 102 நபர்கள் அதிகபட்சமாக இப்பட்டியலில் இருந்தாலும் சவூதியை பூர்வீகமாக கொண்டவர்கள் தான் அதிகபட்சம் 84 நபர்கள் இப்பட்டியலில் உள்ளனர்

source: www.inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza