புதுடெல்லி:இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.
அமைச்சரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்த சச்சார் கமிட்டி செயலாளர் உறுப்பினராகயிருந்த பிரபல பொருளாதார வல்லுநர் அபூ ஸாலிஹ் ஷெரீஃப் சல்மான் குர்ஷிதிற்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.