Wednesday, June 29, 2011

சுனில் ஜோஷி கொலை:என்.ஐ.ஏ புதிய எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்தது

sunil joshi guru ji
புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு சூத்திரதாரியாக திகழ்ந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) புதிய எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் தொடர் விசாரணை நடத்த உடனடியாக நீதிமன்றத்தில் அனுமதி தேடப்படும்.

சுனில் ஜோஷி கொலை வழக்கில் மத்திய பிரதேச மாநில அரசு குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்த போதிலும் ஜோஷியை கொலை செய்வதற்கு விசாலமான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பது என்.ஐ.ஏவின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து புதிய முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) என்.ஐ.ஏ பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள பயங்கரவாத கும்பலின் முன்னணி நபரான ஜோஷியை ரகசியம் வெளியே கசிந்துவிடுமோ என அஞ்சி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கமே கொலை செய்தது கண்டறியப்பட்டது.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்டான். துவக்கத்தில் மத்திய பிரதேச மாநில பா.ஜ.க அரசு மூடிமறைத்த இவ்வழக்கு கடந்த ஆண்டு மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு கடந்த பெப்ருவரி மாதம் 27-ஆம் தேதி குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான பிரக்யாசிங் தாக்கூர், குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய குற்றவாளி ஹர்ஷத் சோலங்கி உள்ளிட்ட நபர்களை குற்றவாளிகளாக சேர்த்து ம.பி. போலீஸ் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது.

குஜராத்தில் அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில் தன்னோடு அவமரியாதையாக நடந்து கொண்ட சுனில் ஜோஷியை கொலை செய்ய பிரக்யாசிங் தாக்கூர் திட்டம் தீட்டியதாக ம.பி. போலீஸ் கண்டறிந்ததாக கூறுகிறது. ஆனால், இது வழக்கை திசை திருப்ப வழி வகை செய்யும் என என்.ஐ.ஏ கருதுகிறது. ஜோஷி கொலை வழக்கின் விசாரணை அனைத்து ஹிந்துத்துவா பயங்கரவாத தாக்குதல் வழக்குகளையும் இணைக்கும் பாலமாக என்.ஐ.ஏ நம்புகிறது.

ம.பி. போலீஸின் விசாரணையை பூரணமாக நம்பவில்லை எனவும், இவ்வழக்கை ஆழமாக புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்பது என்.ஐ.ஏவின் நிலைப்பாடாகும். ஆனால், ஒரு வேளை, சுனில் ஜோஷி போலீஸில் சரணடைந்து குற்றங்களை ஒப்புக்கொள்ள தயாராக இருந்ததால் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் குற்றப்பத்திரிகையில் கூறுகிறது.

இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தும். அத்துடன் பிரக்யாசிங் தாக்கூருடன் ஜோஷி மோசமாக நடந்து கொண்டது குறித்தும் என்.ஐ.ஏ விசாரிக்கும். நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் என்.ஐ.ஏ விசாரணையை துவக்க தீர்மானித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza