Monday, June 20, 2011

பாதி கறுப்புப்பணம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது - மேனகா காந்தி

 வெளிநாடு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமானது என்று பா.ஜ.க எம்.பி. மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பரேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுவிஸ் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் சொந்தமானது. காங்கிரஸ் கட்சி சிபிஐயை லாக்கரில் வைத்துள்ளது.தேவைப்படும்போது அதை பயன்படுத்துகிறது.

பாபா ராம்தேவ் மற்றும் அண்ணா ஹசாரேவிடம் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை கெளரவமானதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் பணம் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராக குரல் எழும்போதெல்லாம் அதை நசுக்க காங்கிரஸ் கட்சி முற்படுகிறது என்று கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza