பாட்னா:மதக் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு தாமதமாவதர்க்கும் மிகக் குறைவான தண்டனை அளிப்பதர்க்குமான தற்போதைய ஒரு எடுத்துக்காட்டு. பிகாரில் 21 வருடங்களுக்குப் முன்னர் நவாடா மாவட்டத்தில் குலினி கிராமத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கில் 37 நபர்களை நிரபராதிகள் என்றும் 10 நபர்களை குற்றவாளிகள் என்றும் கூறி பீகாரின் நவாடா மாவட்டத்தின் நீதிமன்றம் கடந்த ஜூலை 27-ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது. இவழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனையை ஜூலை 29-ம் தேதி நீதி மன்றம் அறிவிக்கும் .
1990-ம் ஆண்டு மார்ச் 12-ம் நாள் ஹிந்துக்களின் ஹோலிப் பண்டிகையின் போது இந்த மதக் கலவரம் ஏற்ப்பட்டது. பெரும்பான்மையான ஹிந்து மக்கள் கிராமத்தின் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் வழியாக முன் எப்போதும் ஊர்வலம் செல்லாத முஸ்லிம்கள் வழிபாடு நடத்தும் மஜித்தின் வழியாக ஊர்வலம் செல்ல முயன்றது கலவரம் ஏற்பட காரணமாக அமைந்தது.
பெரும்பான்மை ஹிந்துக்களின் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று முஸ்லிம்கள் வாழும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இக்க்கலவரத்தில் பட்டப் பகலில் 5 முஸ்லிம்கள் கொடூரமாக வெட்டிக் கொள்ளப்பட்டனர். மேலும் பல முஸ்லிம்கள் காயமடைந்தனர். கொள்ளப்பட்ட முஸ்லிம்கள் நூற் ஆலம் , ஹபிஸ் மியாஹ், பீர் மியன், சல்மான் மியான் மற்றும் வாஹித் மியான் என்போர் ஆவர்.
அக்கிராமத்தை சார்ந்த முஹமது யூனுஸ் இக்கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 57 நபர்கள் மீது முஸ்லிம்களை வெட்டிக் கொலை செய்ததற்காக FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். 57 குற்றவாளிகளில் 47 பேர் வழக்கை சந்தித்து வந்தனர். 9 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர். ஒருவர் இன்னமும் தலை மறைவாகியுள்ளார்.
21 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட நீதி மன்ற நீதிபதி B.P லால் 10 நபர்களை குற்றவாளிகள் என்றும் 37 நபர்களை அவர்களுக்கு எதிரான போதுமான சாட்சியங்கள் இல்லை எனக் கூறி நிரபராதிகள் என்றும் தீர்பளித்தார். நீதிமன்றம் குற்றவாளிகளுக்கான தண்டனையை நாளை அறிவிக்கும் என தெரிகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment