பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் பிள்ளைகளை தாக்கும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர்.
’என்கஃபாலிடிஸ்’ எனும் உயிர்கொல்லி காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் மர்ம காய்ச்சல் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் பிள்ளைகளை தாக்கியுள்ளது. ஜூன் முதல் வாரத்திலிருந்து அரசு மருத்துவ மனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முசாஃபர்பூர் மாவட்ட அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை கூறுகையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்,சிறுமியர் அனைவரிடமும் காய்ச்சலிலிருந்து மீள்வதற்கான அறிகுறி தெரிவதாக கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், பிரபல மருத்துவருமான டாக்டர்.சி.பி.தாக்கூர் கூறுகையில், பிள்ளைகளை தாக்கியுள்ள மர்ம கய்ச்சல், ’என்கஃபாலிடிஸ்’ காய்ச்சலின் அறிகுறிகளுடன் இருப்பதாக கூறியுள்ளார். டாக்டர் தாக்கூர் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வனி குமார் சௌபே ஆகியோர், முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா நினைவு கல்லூரி மற்றும் மருத்துவ மனைக்கு திங்கட்கிழமை அன்று சென்று பார்த்துள்ளனர்.
அந்த மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறுகையில், பெரும்பாலான பிள்ளகள் காய்ச்சலிலிருந்து குணமாவதற்கான அறிகுறிகளுடன் இருப்பதாகவும், இரு பிள்ளைகள் மட்டுமே இன்னும் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அம்மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளரான டாக்டர். பிரஜ் மோகன் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் எந்த பிள்ளையும் மருத்துவ மனையில் அனுமதியாகவில்லை என்று கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment