நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விதத்தில் 9 துணை காவல் பிரிவுகளுக்கு சிறப்பு குற்றப்பிரிவு காவலர்கள் 25 பேர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத் தில் அதிகளவில் குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்காக கடந்த மாதம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி உத் தரவுபடி 9 துணை காவல் பிரிவுகளிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 முதல் 6 காவலர்கள் சிறப்பு குற்றப்பிரிவு சிறப்புப்படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படை யினர் சம்பந்தப்பட்ட துணை காவல்துறை பிரிவுகளில் நடக்கும் குற்ற நிகழ்வுகளில் ஈடுப்பட்டு தலைமறைவாக உள்ளவர் களையும், தற்போது உள்ள குற்றவழக்குகளில் கைது செய்யப்படாத குற்றவாளி களை கண்டு பிடிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகப்படும்படியாக யாராவது இரவு நேரங் களில் சுற்றித்திரிந்தால் அவர்களை பிடித்து விசா ரணை நடத்தி வருகின் றனர். இதன் எதிரொலியாக பல வழக்குகளில் பழைய, புதிய குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்பு குற்றப்பிரிவு படையினர், காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்கள் தங்களது பணியில் ஈடு பட்டாலும் அவர் களுக்கு சில குற்றங்கள் நடப்பது தெரியாமல் போனாலோ அல்லது மறைக்க முற்பட்டாலோ அதனை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க காண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி 25 சிறப்பு குற்றப்பிரிவு காவலரை நியமனம் செய்துள்ளார்.
இதில் முதல்நிலை காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரை தேர்வு செய்யப் பட்டுள் ளனர். இவர்கள் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் ஏற்கனவே உள்ள குற்றப்பிரிவு காவலர்களுக்கு தெரியாத தகவல்களை சேகரிப்பதுடன் அவர்களை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
புளியங்குடியில் வாசுதேவநல்லூர், சிவகிரி காவல் நிலையங்களுக்கு தலைமை காவலர் புஷ்பராஜ், புளியங்குடி காவல் நிலையத்திற்கு முதல்நிலை காவலர் திருமலைகுமார், கடையநல்லூர், சொக்கம் பட்டி, சேர்ந்தமரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு குமரேசன் ஆகியோர் சிறப்பு குற்றப்பிரிவு காவலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment