அமெரிக்காவுக்கான இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டில் முன்னர் பணியாற்றிய பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராகப் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் சந்தோஷ் பர்த்வாஜ் என்பவர் பணிப்பெண்ணாக முன்னர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிரபு தயாள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு நீண்ட நேரம் வேலை செய்ய தன்னை பிரபு தயாள் வற்புறுத்தியதாகவும் தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவர் தர மறுப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், வீட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அறையில் தனக்கு தூங்குவதற்கு இடம் ஒதுக்கினர் என்றும் பாலியல் ரீதியான முயற்சிகளையும் பிரபு தயாள் மேற்கொண்டார் என்றும் பர்த்வாஜ் தனது மனுவில் கூறியுள்ளார்.
பர்த்வாஜுக்கு உதவி வரும் சட்ட உதவி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும், பர்த்வாஜின் புகாரை இந்தியத் தூதர் பிரபு தயாள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "பர்த்வாஜின் புகார் முழு முட்டாள்தனமானது" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment