தூத்துக்குடியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 ஆயிரம் மோசடி செய்த தாய், மகன் மீது காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி முனியசாமிபுரம் அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சப்பாணி முத்து. இவரது மனைவி ராஜம்மாள். இவர்களது மகன் சக்திகணேஷ். தாயும் மகனும் சேர்ந்து ரூ.10 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என்று ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
இதில் தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் மனைவி கவிதா ரூ.50 ஆயிரம் சீட்டு போட்டு ரூ.30 ஆயிரத்து 500 பணம் கட்டினார். இந்நிலையில் திடீரென ஏலச்சீட்டு நடத்துவதை ராஜம்மாள் நிறுத்தியுள்ளார். இதனால் கவிதா, தான் கட்டிய பணத்தைத் திரும்ப கொடுக்கும்படி கேட்டதற்குப் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வன்துள்ளார். இதுகுறித்து கவிதா தென்பாகம் காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை ஆய்வாளர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தாய், மகனைத் தேடி வருகிறார்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment