இந்தியத் திருநாட்டில் குற்றங்கள் மலிந்து ஊழல்கள் பெருகி ஊழல் பெருச்சாலிகள் வாழ்க்கையை சுகமாய் அனுபவிப்பதோடு மட்டும் அல்லாமல் நாட்டையும் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் விற்று வருகின்றனர். பணக்காரன் மேலும் தன் பணத்தை பண்மடங்காக பெருக்கி இந்திய வங்கிகளில் இடமில்லாமல் ஸ்விஸ் வங்கியை நாடுகிறான்.
ஏழைகளோ இருப்பதற்கு இடமில்லாமல், உழுவதற்கு நிலமில்லாமல், வாழ்வாதார உரிமைக்கு அரசிடம் வட்டிக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மரணத்தை நோக்கிய பயணத்தில் விழுகிறான். கார்கில் போரிலிருந்து, கன்னியாகுமரி கார்ப்பரேஷன் கழிவறை வரை தொடரும் ஊழல் குற்றங்கள் ராடியாவையும், ராஜாவையும் விட்டு விடுமா என்ன?
இவ்வாறு ஒருபுறம் ஊழலில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் நாடு, மறுபுறம் நாட்டை ஆழ்கின்றோம் என்ற பெயரில் அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் அரசியல்வாதிகள். வல்லரசாக்க திட்டம் என்ற போர்வையில் அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைத்துக் கொண்டிருக்கின்றனர். அடகு வைத்தால் அதற்கு ஆதாரம் தேவையல்லவா? அதையும் குறையில்லாமல் செய்ய நினைத்த கூட்டம் EUM (End Use Monitory Agreement) என்ற பெயரில் ஒப்பந்தமும் செய்து விட்டார்கள்.
இதன் படி இந்திய இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும், அமெரிக்க இராணுவத்தினர் பார்வையிடலாம், கேள்வி கேட்கலாம் என்று இந்திய இறையாண்மையை அமெரிக்காவிற்கு விற்று விட்டார்கள். இறையாண்மையை விற்றவர்கள், இடங்களையும் அந்நியர்களுக்கு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று ஏலம் போட்டு விற்று வருகின்றனர். இவை ஒருபுறம், மறுபுறம் அகண்ட பாரத கனவு கொண்ட அரக்கர்களின் கையில் மாட்டிக் கொண்டு அல்லோலப்படுகிறது இந்தியா.
1875ல் ஆரிய சமாஜத்தைத் தொடர்ந்து பிரிவினைவாதத்தை வளர்த்து வந்தவர்கள், 1923ல் சுத்தி இயக்கம் என்ற பெயரில் செய்த கொடூரங்கள், அதன் வெற்றியாக 1925ல் ஆ.எஸ்.எஸ். உதயமானது. தங்கள் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறார் என்பதனால் மகாத்மா காந்தியைக் கொலை செய்தார்கள்.
இதன் தொடச்சியாக பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் 1980ல் அரசியல் பிரவாகம் எடுத்த இவர்கள் இன்று இந்தியாவின் அழிவுக்காக பாடுபட்டு வருகின்றனர். 1983 அஸ்ஸாம், 1989 பாகல்பூர், 1992 மும்பை, 1996 கோவை, 2002 குஜராத் என இவர்கள் செய்த இனப்படுகொலைகளைப் பட்டியலிடலாம். இவை நாடறிந்தவை. இதில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், பிடுங்கப்பட்ட உயிர்கள், பறிக்கப்பட்ட கற்புகள், எரிக்கப்பட்ட குழைந்தைகள், சூறையாடப்பட்ட சொத்துக்கள்,… இவைகளை நினைத்தாலே உள்ளம் பதறுகிறது.
நான் இங்கு இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களால் இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் வந்தேறிகளாக, நாடோடிகளாக வந்த போது ஆடு மாடுகளோடு அவர்களும், நாட்டு நடப்புகளோடு நாமும் இருந்தோம். இன்று நாட்டு நடப்புகளோடு அவர்களும் ஆடு மாடுகளோடு நாமுமாக மாறிப் போனோம். இந்த வந்தேறி நாடோடிக் கூட்டம் நாட்டின் பூர்வீகக் குடிமக்களான நம்மை நாட்டிலிருந்து அப்புறப்படுத்த நாச வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆடு மாடுகளோடு வந்த நாடோடிகள் இன்று நாடாளும் கூட்டமாக மாறிப் போன துக்கமும். நாட்டை ஆண்ட கூட்டம் இன்று மூன்றாம் தரக் குடிமக்களாகிப் போன சோகமும் இன்று அரங்கேறி விட்டது. இந்த இரண்டு கூட்டத்தினரின் செயல்பாடுகளையும், போராட்டங்களையும் சற்று உற்று நோக்கினால் உண்மை விளங்கும். இதனைக் கடந்த கால வரலாறுகளோடு ஒப்பிடுவோம்.
இந்தியாவில் கடவுள் கொள்கையற்ற திராவிடர்கள் வாழ்ந்த காலம் அது. உழைப்பும் அதன் மூலம் கிடைக்கும் உணவும், நிம்மதியோடு வாழ்வதற்கு போதுமானது என்று பிரிவினை அற்றவர்களாக, இடத்திற்கும், நிலத்திற்கும் ஆசைப்படாத மக்களாக வாழ்ந்த காலம் அது. இதனைக் கெடுத்து, அவர்களது ஒற்றுமைக்கு உலை வைக்க வந்த கூட்டம்தான் ஆரிய பார்ப்பன பனியா கூட்டங்கள்.
ரஷ்யாவில் வாழ்ந்தவர்கள் அங்கு ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் அந்த நாட்டை விட்டு புலம் பெயர முடிவெடுத்து திட்டம் தீட்டினர். அதன் பலன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் இவர்களுக்கு சிக்கியது. ஆடு மாடுகளோடு கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழையும்போது என்னவோ அமைதியாய் அறியாதவர்கள் போன்றுதான் காலடி எடுத்து வைத்தார்கள்.
காலடி வைத்த சிறிது காலத்திலேயே கருவறுக்கும் வேலையை ஆரம்பித்தார்கள். இன்று எவ்வாறு ஃபலஸ்தீன மண்ணில் யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்க நினைத்து இடத்தை தந்த மக்கள் அனாதைகளாக்கப்பட்டர்களோ அதே போன்றுதான் அன்றும் நடந்தது. ஃபலஸ்தீன மண்ணில் இடம் கிடைத்தவுடன் ஃபலஸ்தீன் முழுவதையும் தங்கள் வசம் கொடுக்க வேண்டும் என்று கூறி அடைக்கலம் தந்தவர்களை அழிக்கத் துடிக்கும் யூதக் கயவர்களின் கூட்டாளிகளான பார்ப்பனியர்கள், அதே வேலையை இந்தியாவிலும் தொடர்ந்தார்கள்.
அங்கே மண்ணின் பெயரில் கலகத்தை உண்டு பண்ணினார்கள். இங்கோ கடவுள்களை உருவாக்கி மக்களைத் துண்டாடினார்கள். திராவிடர்கள் என்று ஒற்றுமையாய் வாழ்ந்தவர்களை கடவுளின் பெயரைக் கூறி ஐந்து பிரிவாக்கினர். பிரமாணன், சத்திரியன், சூத்திரன், வைசியன், பஞ்சமன் என சிவனின் தலையிலிருந்து கால் வரை பிறந்ததாகக் கூறி மக்களை மடமையில் ஆழ்த்தினர்.
பிராமணர்கள் உயர்ந்தவர்களாகவும் மற்றவர்கள் தாழ்ந்தவர்களாகவும் ஆக்கப்பட்டனர். இதில் சூத்திரன், வைசியன், பஞ்சமன், இவர்களை வேசியின் பிள்ளைகள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் கூறி இவர்கள் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இவர்களது குலப் பெண்கள் மேலாடை அணிய தடை விதித்தார்கள். இதை விடக் கொடுமை தேவதாசிகள் என்று கூறிய அந்தப் பெண்களை விபச்சாரிகளாக்கி விரும்பிய நேரத்தில் அனுபவித்து மகிழ்ந்து சுகபோக வாழ்க்கையில் ஊறித் திளைத்தார்கள்.
அந்த மக்களோ இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்து நாமும் நல்வாழ்க்கை வாழ மாட்டோமா என்று ஏங்கித் தவித்த போது அவர்களது காயத்திற்கு மருந்தாய், மனதுக்கு ஆறுதலாய் வந்தது இஸ்லாம் என்னும் நேரிய வழி.
இஸ்லாம் மட்டுமே இந்தியாவிற்குள் நுழைந்ததே தவிர அரபியர்கள் அல்ல.
பார்ப்பனியர்கள் கூறிய கருத்துக்கு நேர் மாற்றமாய் விளங்கியது இஸ்லாம். பார்ப்பனியமோ கடவுளின் பெயரில் மக்களைப் பிரித்தது. இஸ்லாமோ இறைவனின் பெயரால் மக்களை ஒன்றிணைத்தது. பார்ப்பனியமோ மக்களின் மனங்களை இரணங்களாக்கி, மானங்களை மண்ணிலே புதைத்து மனிதர்களாக வாழ்வதற்கு பதில் மிருகங்களாக்கியது.
இஸ்லாமோ மனங்களை ஒன்றிணைத்து, மானத்திற்கு மரியாதை கொடுத்து மனிதனை மாமனிதானாக்கும் வழிகளைத் தந்தது. இதற்கு சாட்சி இந்தியாவில் இன்று வாழும் முஸ்லிம்களே. இதனை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள் ஆனார்கள். ஏற்காதவர்கள் விழிப்புணர்வு பெற்று முஸ்லிம்களோடு நண்பர்களானார்கள்.
அன்று மடமை எனும் இருளில் மண்டியிட்டு வாழ்ந்த மக்களுக்கு விடுதலை தந்தது இஸ்லாம். இது ஆட்சி அதிகாரங்களிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் பிரதிபலித்தது. அதன் விளைவு உமரின் (ரழி) ஆட்சி தேவை என்று உரைத்தார் காந்தியடிகள். அன்று காந்தி சொன்னது நிறைவேறாதா என்ற ஏக்கம் இன்று அடக்கி ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, அமைதியை விரும்புகிற அனைத்துத் தரப்பு மக்கள் மனதிலும் நிழாலாடிக் கொண்டிருக்கிறது.
ஆகவே சிந்தித்துக் கொள்ளுங்கள் யார் தீவிரவாதி, யார் பயங்கரவாதி, யார் வந்தேறிகள், நாடோடிகள் என்று. இவர்களது உண்மை முகத்திரை கிழிய ஆரம்பித்துவிட்டது. இந்த அந்நிய ஆதிக்க ஆக்கிரமிப்பாளர்களை மக்கள் இனம் கண்டு கொண்டார்கள்.
புதுவலசை பைசல்
0 கருத்துரைகள்:
Post a Comment