2G ஊழல் வழக்கில் சி பி ஐ யால் கைது செய்யப் பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்ட நிலையில் தன் மகளைச் சந்தித்து ஆறுதல் கூற நேற்று காலை டெல்லி சென்ற திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை திகார் சிறைக்குச் சென்று மகள் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்.
மகள் கனிமொழியைக் கண்டவுடன் கருணாநிதி உணர்ச்சி வசப் பட்டு கண்ணீர் மல்க உருக்கமாகக் காணப் பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது மனைவி ராசாத்தி அம்மாள், மகன் அழகிரி உடன் இருந்துள்ளனர்.
கருணாநிதி மகள் கனிமொழியுடன் சுமார் 45 நிமிடங்கள் உரையாடிக் கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.
கனிமொழியைச் சந்தித்த பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத் குமாரையும் கருணாநிதி சந்தித்துப் பேசியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment