ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், குரங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கும், விநோதமான நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக, பத்திரிகை அடிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தல்வாஸ் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அனுமன் கோவிலில் புரோகிதராக இருப்பவர் நிரஞ்சன் பஞ்சோலி. இவர், இரண்டு வயது நிரம்பிய, சிங்கி என்ற பெண் குரங்கை வளர்த்து வருகிறார்.
அதேபோல், டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்த் சைனி என்ற ஆட்டோ டிரைவர், ராஜு என்ற ஆண் குரங்கை வளர்த்து வந்தார். மூன்று வயது நிரம்பிய, இந்த குரங்கிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக, தகுந்த பெண் குரங்கை தேடி வந்தார்.
தல்வாஸ் கிராமத்தில் சிங்கி என்ற குரங்கு இருப்பதாக தெரிந்ததும், தன் விருப்பத்தை, நிரஞ்சன் பஞ்சோலியிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இரண்டு குரங்கிற்கும், அடுத்த மாதம் 6ம் தேதி, திருமணம் செய்து வைப்பது என, இருவரும் முடிவு செய்தனர். இந்த திருமணத்தை விமரிசையாக நடத்துவது என்றும் முடிவு செய்தனர்.
திருமணத்துக்காக, 200 பத்திரிகைகள் அடிக்கப்பட்டு, முக்கிய விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரஞ்சன் பஞ்சோலி," இந்த திருமணத்துக்காக, மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை எதுவும் கொடுக்கப்படவில்லை' என, மிகவும் "சீரியஸ்'ஆக பதில் அளித்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment