Thursday, June 23, 2011

கம்யூனிச சீனாவின் வதை முகாம்களுக்கு

OurUmmah: அமெரிக்காவின்  குவாந்தநாமோ, அபூஹிராப் வதை முகாம்கள் போன்று சீனாவின் பல வதை முகாம்களால் கிழக்கு துருக்கி மக்கள் வதைக்கப்பட்டு வருகின்றனர். சீனா சிங்கியாங் என்று சொல்லும் கிழக்கு துருக்கி தேச முஸ்லிம்களை பல அபூ ஹிராப், குவாந்தநாமோ முகாம்களில் வதைத்து வருகின்றது சீனா.

1949 இல் கிழக்கு துருக்கி கம்யூனிச சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது அன்றில் இருந்து கிழக்கு துருக்கி முஸ்லிம்கள் தம்மை அடக்கு முறைகளில் இருந்து விடுவிக்க போராடி வருகின்றனர். சீனா தான் ஆக்கிரமித்த கிழக்கு துருக்கியை சிறிது சிறிதாக கபளீகரம் செய்து வருகின்றது அதன் மக்கள் தொகையில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது பெரும்பான்மை உய்க்ஹூர் -Uyghur- பெரும்பான்மை முஸ்லிம்களை அதன் நகரங்களில் சிறுபான்மையாகியுள்ளது.

அவர்கள் சீனாவின் அடக்கு முறைகளுக்கு எதிராக அணிதிரளும் ஒவ்வொரு தடவையும் அவர்களை மிகவும் மோசமாக ஒடுக்கி வருகின்றது இவர்கள் மீதான ஒடுக்குமுறை அங்கு குடியேற்றப்பட்டுள்ள சீனர்களாலும் ஆக்கிரமித்து நிற்கும் சீன படைகளாலும் தொடராக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீனாவின் இரும்பு பிடில் இருந்து அரிதாக தப்பி வெளிவரும்வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அங்கு பல வதை முகாம்களை உருவாக்கி எழுச்சி பெரும் மக்களை சீனா வதைத்து வருகின்றது உலகில் மிகவும் ஒடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகமாக ஆக்கிமிக்கப்பட்டுள்ள கிழக்கு துருக்கி மக்கள்  கருதப்படுகின்றனர் இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர்  youtube இல் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றை இங்கு தருகின்றோம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza