Thursday, June 23, 2011

துபையிலிருந்து கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்!

துபையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட  2 கிலோ தங்க நகைகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் செங்கற்பட்டில் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 4 பேரை வருவாய் புலனாய்வுத் துறையினர் நேற்று புதன் கிழமை செங்கற்பட்டில் வளைத்துப் பிடித்தனர். அவர்களை சோதனையிட்டதில், துபையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட  2 கிலோ தங்க நகைகள் சிக்கின.


இந்த தங்க நகைகளை அவர்கள் துபையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கடத்தி கொண்டுவந்து, பின்பு அங்கிருந்து சென்னைக்கு எடுத்து வருகையில் வழியில் சோதனையிடும்போது பிடிபட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 கிலோ தங்க நகைகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza