Sunday, June 26, 2011

ருவாண்டா இனப்படுகொலை அமைச்சருக்கு ஆயுள்தண்டனை!

ருவாண்டா இனப்படுகொலை தொடர்பாக ஜ.நா. அனுசரணை நீதிமன்றம் அன்னாட்டின் முன்னாள் பெண் அமைச்சருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தன்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 2001 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலை நடைபெற்ற காலத்தில் அன்னாட்டு அமைச்சராக இருந்த போலினின் கண்காணிப்பின் கீழ் சிறுபான்மையின மக்கள் மற்றும் தாராளவாத போக்குடையவர்கள் என எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு பின்னர் தப்பிசென்ற போலின் 1997 ஆம் ஆண்டு கென்யாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ருவாண்டா படுகொலை விவகாரம் தொடர்பாக ஜ.நா அனுசரணை குற்றவியல் நீதிமன்றம் படுகொலைகளுக்காக பெண்ஒருவரை குற்றவாளியாக இனம் கண்டு தீர்ப்பளித்துள்ளமை முதல்தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza