உலகின் அதிவேக கம்ப்யூட்டராக இதுவரை அறியப்பட்டிருந்த சீனாவின் டியான்ஹி-1ஏ என்ற கம்ப்யூட்டரைவிட அதி விரைவு கம்ப்யூட்டரை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஜப்பான் நாட்டின் கே சூப்பர் கம்ப்யூட்டர் இதுவரை முன்னிலை வகித்த சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டரின் செயல் திறனை விட மும்மடங்கு வேகமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலகின் மிக அதி விரைவு கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கம்ப்யூட்டர் அளவீட்டின்படி, சீனாவின் டியான்ஹி-1ஏ என்ற கம்ப்யூட்டர் 2.507 பெடாபிளாப்கள் வேக செயல்பாட்டில் முதலிடம் பிடித்திருந்த நிலையில் அதனை பின்னுக்கு தள்ளி ஜப்பானின் கே சூப்பர் கம்ப்யூட்டர் 8.2 பெடாபிளாப்கள் என்ற வேக செயல்பாட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. சுமார் 1.2 பில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கம்ப்யூட்டர் லேப்டாப் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களிலுள்ள ஒரு பிராசசரை போன்று ஏறத்தாழ 70 ஆயிரம் பிராசசர்களை தன்னுடைய சர்க்யூட் போர்டில் கொண்டுள்ளது.
உலக டாப் 10 சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரிசையில் ஐந்தினை அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர்களும், இரண்டினை சீனாவும், இரண்டினை ஜப்பானும் மற்றும் பிரான்சு ஒரு இடத்திலும் என்ற வகையில் இடம் பிடித்துள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment