Sunday, June 26, 2011

திட்டமிட்டு தப்பவைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!

சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து பேர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை சமர்பித்தது தேசிய புலனாய்வு ஏஜன்சி ஆன என்.ஐ.ஏ.

மேற்குறிய ஐந்து பேர்களின் குற்றப்பத்திரிக்கையில் பல இடங்களில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் வருகிறது.

இவர் குற்றவாளிகளுக்கு பணஉதவி மற்றும் ஆலோசனை வழங்கி அந்த குற்றத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் இவரை குற்றவாளியாக்கி இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பயங்கரவாத செயல்களை குறித்து சதித்திட்டம் தீட்ட சபரிடாமில் நடத்திய ரகசிய கூட்டத்தில் அஸிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியுடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றுள்ளார். சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அஸிமானந்தா, சுனில்ஜோஷி கும்பலுக்கு இந்திரேஷ் குமார் அளித்தார் என்பதும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது.

ஆனால் இவ்வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளின் வாக்கு மூலமும், சூழ்நிலை ஆதாரங்களும் இருந்த பிறகும் கூட இந்திரேஷ் குமாரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தவில்லை. முன்னர் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவரை சி.பி.ஐ விசாரணை செய்ததை என்.ஐ.ஏ புறக்கணித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளின் பங்கு வெளியான சூழலில் அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றும் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இந்திரேஷ் குமாரின் பங்கு வெளியான பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அரசின் பகிரங்கமான இரட்டை வேடமாகும்.

இதில் இருந்து நம்மால் ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது ஹிந்துத்துவா பயங்கரவாதம் இந்தியாவின் எல்லா துறைகளிலும் ஊடுருவி விட்டது என்பதே. குறிப்பாக காங்கிரஸ் கட்சி முதல் கம்னிஸ்ட் கட்சிகள் வரை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உறுபினர்கள் ஊடுருவி விட்டார்கள் என்பதை நிருபிக்கும் பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளது.

அதுமாதிரி இந்தியன் உளவுத்துறை, நீதித்துறை, ராணுவம், காவல்துறை இப்படி எல்ல துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மை. இந்தியாவில் மதசார்பின்மை, சமத்துவம் என்று சாகிறதோ அன்று இந்தியாவின் உடைவும் ஆரம்பமாகி விடும் என்பதே நமது கவலை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza