Monday, August 29, 2011

அமெரிக்கா:ஐரின் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

imagesCANHSVFM
வாஷிங்டன்:அமெரிக்காவின் நியூயார்க் நகரை ஐரின் புயல் நேற்று தாக்கியது. நியூயார்க், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா ஆகிய பகுதிகள் ஐரின் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

லோக்பால் மூலம் மிகப்பெரிய அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது: நீதிபதி சந்தோஷ் ஹெக்டே

imagesCANOC2G7
பெங்களூரு:லோக்பால் மசோதாவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேசமயம், மிகப் பெரிய அற்புதத்தை நாம் எதிர்பார்க்க முடியாது என்று நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.

ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. ஜனலோக்பால் வரைவு மசோதாவை உருவாக்கிய குழுவில் இவரும் ஒரு முக்கிய உறுப்பினர். இருப்பினும் அன்னா ஹஸாரேவின் போராட்ட முறையால் அதிருப்தி அடைந்து அதிலிருந்து விலகியிருந்தார் ஹெக்டே.

ராஜீவ் படுகொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை ரத்தாக்கக்கோரி இளம் பெண் தற்கொலை

Senkodi2-300_29082011
காஞ்சிபுரம்:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு தண்டனையை ரத்தாக்க வேண்டும் எனக்கோரி இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

காஞ்சிபுரத்தைச் சார்ந்த செங்கொடி(27) என்பவர்தான் அந்த இளம் பெண். அடுத்த மாதம் 9ம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு

imagesCA40M47Q
ஜம்மு:கடந்த வருடம் கஷ்மீரில் நடந்த அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் பொழுது பாதுகாப்பு அதிகாரிகள் மீது கல்லெறிந்தது உட்பட பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

பல மாதங்களாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 1200 பேர் சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Sunday, August 28, 2011

36 பாகிஸ்தான் படைவீரர்கள் படுகொலை

25officialsofChitralScoutskilledinattack_31654
இஸ்லாமாபாத்:ஆப்கான் போராளிகள் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தானின் இராணுவப் படையுடன் நடத்திய தாக்குதலில்326 பேர் கொல்லப்பட்டனர். குடிமக்களின் வீடுகளை நோக்கியும் குண்டு மழை பொழிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவப் படைவீரர்களும், போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.

ராஜீவ் படுகொலை: மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது – தமிழ் அமைப்புகள்

primary-medium
வேலூர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை செப்டம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆதலால் வேலூர் மத்திய சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் மூன்று வளைய பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறையைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய படை நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் அதிக போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அன்னா ஹசாரேயின் கோரிக்கை ஏற்பு – உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது – அரசு கீழ்ப்படிந்தது!

800_anna_hazare_india_ap_110827
டெல்லி:தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திட அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.  இதனால் இன்று காலை 10 மணிக்கு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

இதுக்குறித்து அன்னா ஹசாரே கூறும்போது;  ”இது மக்களின் வெற்றி என்றும், அரசின் அறிவுறுத்தலை தான் ஏற்றுக்கொள்வதாகவும்” கூறினார்.

லோக்பாலை மாதிரியாக வைத்து எல்லா மாநிலங்களிலும் லோகாயுக்தாவை உருவாக்க வேண்டும், கீழ்த்தட்டு வரையுள்ள அரசு அதிகாரிகளை லோக்பாலின் வரையறைக்குள் கொண்டு வரவேண்டும், அனைத்துப் பிரிவினருக்கும் குடியுரிமைச் சான்று வழங்கவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை அன்னா ஹசாரே முன் வைத்திருந்தார். இவை அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

பாபரி மஸ்ஜித் வழக்கு: பாப்புலர் ஃப்ரண்ட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

imagesCAFWCQSD

டெல்லி பாபரி மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்றும், பாபரி மஸ்ஜித் நின்றிருந்த 2.7 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச வக்ஃப் வாரியத்திற்கு வழங்கிட உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

Thursday, August 25, 2011

லிபியா:எதிர்ப்பாளர்களின் லட்சியம் கத்தாஃபியின் பிறந்த நகரம்

web-ANI01-LIBYA_1311953cl-8
திரிபோலி:லிபியாவின் தலைவர் கர்னல் முஅம்மர் கத்தாஃபி ஆட்சிபுரியும் பாபுல் அஸீஸாவின் கோட்டையை கைப்பற்றி ஒரு நாள் கழிந்த பிறகும் கத்தாஃபியையோ அவரது மகன்களையோ கைதுச் செய்ய எதிர்ப்பாளர்களின் ராணுவத்திற்கோ, அவர்களுக்கு எல்லாவித உதவியையும் அளிக்கும் நேட்டோ படையினருக்கோ இயலவில்லை.

புதன்கிழமை காலை அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலும், ரேடியோவும் கத்தாஃபியின் அறிக்கைகளை வெளியிட்டன. அதில் கத்தாஃபியின் குரல் ஒலிபரப்பப்பட்டது. அப்பொழுது அவர் ‘மரணம் அல்லது இரத்தசாட்சி ஏற்படும் வரை போராடுவேன்’ என தெரிவித்தார்.

கத்தாஃபியை விரட்டுவது எண்ணெய்வளத்தை கைப்பற்ற – சாவேஸ்

imagesCA8CS9OBகராக்கஸ்:வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் லிபியா அதிபர் கத்தாஃபிக்கு பகிரங்கமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

லிபியாவின் அதிபராக வெனிசுலா கத்தாஃபியை மட்டுமே அங்கீகரிப்பதாக கடந்த புதன்கிழமை சாவேஸ் தெரிவித்தார்.

காணாமல் போன கஷ்மீரிகள் ஏராளம்: நேபாளம் ஒப்படைத்தவர்களைக் குறித்தும் தகவல் இல்லை

imagesCACGSKTM
புதுடெல்லி:கஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே காணாமல் போன கஷ்மீரிகளை குறித்து அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட கஷ்மீரிகளின் உடல்களை என்ன ஆனது? என்பதுக் குறித்த கேள்விக்கு பதில் இல்லை.

நேபாளம் உள்பட அயல்நாடுகளில் இந்தியாவின் உத்தரவின் பேரில் கைதுச் செய்யப்பட்ட கஷ்மீரிகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதுக் குறித்து அவர்களின் உறவினர்களின் விசாரணையும் பலன் தரவில்லை.

ஹஸாரே:அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்தொற்றுமை இல்லை

AllpartymeetLokpal295
புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னா ஹஸாரே உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் வேளையில் பிரச்சனையை தீர்ப்பதற்காக நேற்று கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆனால், ஹஸாரேவின் உடல்நிலை மோசமடைந்துள்ள சூழலில் அவர் உடனடியாக உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்; ஜன லோக்பால் மசோதாவைப் பரிசீலனை செய்து, ஊழலை ஒழிக்க வலுவான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்; அதே சமயத்தில், சட்டம் இயற்றுவதில் நாடாளுமன்றத்துக்கு உள்ள மாட்சிமை காக்கப்பட வேண்டும் என்று பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் போராளி கமாண்டர் பலி

காஸ்ஸா:ஃபலஸ்தீனில் இஸ்ரேல் அநியாயமாக நடத்திவரும் விமானத்தாக்குதலில் அல்குத்ஸ் ப்ரிகேடர்ஸ் கமாண்டர் இஸ்மாயீல் அல் இஸ்மர் கொல்லப்பட்டார்.

எகிப்தின் எல்லைக்கு அருகே ரஃபா ஊடாக பயணித்த அவருடைய வாகனத்தில் ஏவுகணையை ஏவி தாக்கியது இஸ்ரேல்.

Wednesday, August 24, 2011

பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம்:சி.பி.ஐ கண்டுபிடிப்பு

imagesCAZ720V7
புதுடில்லி:இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான பழம்பெரும் பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கடந்த 1992-ஆம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டது. இதுத்தொடர்பான வழக்குகள் உ.பி மாநில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதுத்தொடர்பாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.

கரசே வகர்களை அழைத்து வந்தது யார்? மஸ்ஜிதை இடிக்க திட்டமிட்டது எப்படி? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்கள் சேகரித்தனர். சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 15-ஆம் தேதி இந்த விசாரணை முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த யெமன் நாட்டு சபாநாயகர் மரணம்

ரியாத்:யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் மாளிகையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் அப்துல் அஸீஸ் அப்துல் கனி மரணமடைந்துள்ளார்.

ரியாத் மருத்துவமனையில் அவர் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பழங்குடியின போராளிகள் நடத்திய தாக்குதலில் ஸாலிஹ் உள்பட பலருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்தாஃபியின் வீடு எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் – திரிபோலியை கைப்பற்ற போராட்டம் தொடர்கிறது

imagesCAXVFC3M
திரிபோலி:லிபியாவில் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் வீடு அமைந்திருக்கும் பாபுல் அஸீஸாவை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கத்தாஃபி ஆதரவு ராணுவத்துடன் நடந்த கடுமையான மோதலுக்கு பிறகு எதிர்ப்பாளர்கள் பாபுல் அஸீஸாவில் நுழைந்துள்ளனர். கத்தாஃபியின் வீட்டு வளாகத்திலிருந்த கத்தாஃபியின் சிலையை எதிர்ப்பாளர்கள் உடைத்ததாகவும், இங்கு எதிர்ப்பாளர்களின் கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அல்ஜஸீரா தெரிவிக்கிறது.

கஷ்மீர் கல்லறைகள்: உண்மையை கண்டறிய கமிஷன் – உமர் அப்துல்லாஹ். ஐ.நா தீர்ப்பாயம் விசாரிக்கவேண்டும் – கிலானி

_54740516_kashmir_where
ஸ்ரீநகர்:கடந்த 21 ஆண்டுகளில் ஜம்முகஷ்மீரில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆராய கமிஷன் தேவை என முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

வடக்கு கஷ்மீரில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை மாநில மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழு கண்டறிந்ததை தொடர்ந்து உமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹஸாரேவுக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு – மணிப்பூருக்கு வருகை தர கோரிக்கை

irom sharmila
குவஹாத்தி:சிறப்பு ஆயுத சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் இரோம் ஷர்மிளா அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹஸாரேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மணிப்பூரின் இரும்பு பெண்மணியான ஷர்மிளா தனது ஆதரவை தெரியப்படுத்தியுள்ளார்.
அன்னா ஹஸாரேவின் குழுவினர் போராட்டத்திற்கு ஆதரவு தேடி நேற்று முன்தினம் ஷர்மிளாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

ஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு

imagesCAS3WAXG
புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஹஸாரே குழுவினர் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஸய்யத் அஹ்மத் புகாரியை சந்தித்துப் பேசினர்.

ஹஸாரேவின் போராட்டத்தில் முஸ்லிம்களை உட்படுத்தாததற்கு நேற்று முன் தினம் இமாம் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஹஸாரே:சுமூக தீர்விற்கான முயற்சி துவக்கம்

imagesCABNQ1W7
புதுடெல்லி:ஜனலோக்பால் மசோதாவிற்காக அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது தினத்தை எட்டிய வேளையில் ஹஸாரேவின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் சமூக தீர்விற்கு வழி ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
அதேவேளையில், ஹஸாரேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு ஹஸாரேயை மாற்றுவதற்கு டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டபோதிலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. குளுக்கோஸ் ஏற்றுவதற்கும் அவர் மறுத்துவிட்டார். மரணம் வரை நோக்கத்தை அடையும்வரை போராடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். தனது ஒரு சிறுசீரகம் மோசமடைந்தால் இன்னொன்றை தானமாக அளிக்க ஆட்கள் தயாராக இருப்பார்கள். தன்னை பலம் பிரயோகித்து மருத்துவமனையில் அனுமதிக்க அரசு முயற்சித்தால் அதனை தடுக்கவேண்டும் என ஹஸாரே அழைப்புவிடுத்துள்ளார்.

சென்னை:பூசா​ரிக்கு வந்த நகை மோகம்-இளம்​பெண்ணை கத்தியால் குத்திவிட்​டு தப்பிக்க முயன்றபோது இடுப்பெலும்​பு முறிவு

imagesCAE0VZB9
சென்னை:தங்கத்தின் விலை ஒரு புறம் ஏறிக்கொண்டிருக்கையில் அதன் மீதான பேரார்வம் பூசாரியையும் விட்டுவைக்கவில்லை.

சென்னை ஜாபர்கான் பேட்டையில் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி நகைப்பறிக்க முயன்ற பூசாரி ஒருவர் 2-வது மாடியிலிருந்து குதித்தபொழுது இடுப்பெலும்பு முறிந்துவிட்டது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பூசாரி ராமகிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாபர்கான் பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் பூஜை நடத்தினார். அப்போது அந்த குடியிருப்பை நோட்டம் போட்ட அவர் அங்குள்ள பெண்கள் தனியாகவும், நிறைய நகைகள் அணிந்திருப்பதையும் கவனித்தார்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த அரசு நடவடிக்கை: அமைச்சர் முஹம்மது ஜான்

Mohamed john
சென்னை:தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் பதிலளித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக, 3.5 சதவீதம் இருக்கிறது. இதை உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் தெரிவித்தார். அறிவிப்பை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, August 23, 2011

திரிபோலி எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில்

16054352
திரிபோலி:லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியிடம் மீதமிருந்த நகரமான திரிபோலி கிட்டத்தட்ட எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் பூரணமாக வந்ததையடுத்து 42 வருடகால கத்தாஃபியின் ஆட்சி முடிவு வந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிலையத்தை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எதிர்ப்பாளர்கள் கவுன்சிலை லிபியாவின் அதிகாரப்பூர்வ அரசாக எகிப்து அங்கீகரித்துள்ளது.

ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா

sau-kaaba
மக்கா:பரிசுத்த உம்ராவை ரமலான் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தால் கஃபாவும், அதன் சுற்றுவட்டாரங்களும் திணறுகின்றன.

சாதாரணமாக ரமலானின் இறுதி பத்து தினங்களில்தான் பெரும் மக்கள் வெள்ளம் காணப்படும். ஆனால், இவ்வாண்டு ரமலானின் முதல் பத்து தினங்களிலேயே நம்பிக்கையாளர்கள் பெருமளவில் திரண்டுவிட்டனர்.

ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்கள் ஏன் அவருடைய குழுவில் இடம்பெறவில்லை – டெல்லி இமாம் கேள்வி

imagesCAAS0WVU
புதுடெல்லி:அன்னா ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்களை ஏன் அவருடைய குழுவில் இடம்பெற செய்யவில்லை என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதவாதம்தான் ஊழலை விட தேசத்திற்கு அச்சுறுத்தலானது. மதவாதத்தை குறித்து ஹஸாரே வாயை திறப்பதில்லை. ஹஸாரே அவரின் பின்னணியில் செயல்படும் அரசியல் சக்தியிடமிருந்து விடுபடவேண்டும்.
குஜராத்தில் முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதற்கு தலைமை வகித்த நரேந்திரமோடிக்கு புகழாரம் சூட்டியவர்தாம் ஹஸாரே.

கஷ்மீரில் கல்லறைகள்:பதிலளிக்க தயங்கும் மாநில அரசு

untitled
ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் மூன்று வடக்கு மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்படாத 38 கல்லறைகளிலிருந்து 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழுவினரின் அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மாநில அரசு தயாராக இல்லை.

அறிக்கையை பார்க்கவில்லை எனவும், கிடைத்தவுடன் ஆராய்ந்த பிறகு மட்டுமே பதில் அளிப்போம் என கஷ்மீர் மாநில உள்துறை அமைச்சர் நாஸில் அஸ்லம் வாணி தெரிவித்துள்ளார்.

ஃபலஸ்தீன் போராளிகளின் தாக்குதல் தீவிரம்

gaza_jpg_1310671cl-8
காஸ்ஸா:இஸ்ரேலின் அக்கிரம தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஃபலஸ்தீன் போராளிகள் தாக்குதலை வலுப்படுத்தியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலும் நேற்று காலையிலும் தெற்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. மூன்று க்ராட் ராக்கெட்டுகள், கஸ்ஸாம் ராக்கெட், மோட்டார் குண்டுகள் ஆகியவற்றை உபயோகித்து போராளிகள் தாக்குதலை நடத்தினர். சேத விபரம் வெளிவரவில்லை. இஸ்ரேலுடன் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயார் என்ற செய்தி வெளியான சில மணிநேரங்களுக்கு பிறகு இஸ்ரேல் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. போர் நிறுத்தத்திற்கு அனைத்து போராளி அமைப்புகளும் தயாரில்லை என்பதை தான் இச்சம்பவம் உறுதிச்செய்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்

26IN_ROY_275742e
ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

’தி ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை ஹசாரே மீது சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘நாட்டில் அவசரமாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு விஷயத்தில் கூட ஹஸாரே குரல் எழுப்பவில்லை. தனது மாநிலமான மஹாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக ஹஸாரே வாயை திறக்கவில்லை. ஹஸாரே முன்வைக்கும் லோக்பால் மசோதா காந்தியடிகளின் அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரான அடக்கியாளும் சட்டமாகும்.

ஆந்திரா:காங்.அரசுக்கு நெருக்கடி- 26 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

M_Id_230279_Andhra_MLAs
ஹைதராபாத்:ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன்ரெட்டிக்கு நெருக்கமான ஆந்திர சட்டசபையின் 26 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸை சார்ந்த 24 பேரும், தெலுங்குதேசம் கட்சியை சார்ந்த 2 பேரும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களாவர்.

குழுச் சண்டையால் தள்ளாடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசுக்கு இச்சம்பவம் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கான முயற்சியை கண்டித்து பதவியை ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பி.சுபாஷ் சந்திரபோஷ் தெரிவித்துள்ளார்.

Monday, August 22, 2011

கராச்சி கலவரம்:மரண எண்ணிக்கை 87 ஆனது

Karachi-violence-death-toll-hits-14
கராச்சி:அரசியல் கலவரம் தீவிரமடைந்துள்ள கராச்சியில் இரண்டு குழந்தைகள் உள்பட ஏழுபேர் கொல்லப்பட்டனர். ஒரங்கி நகரத்திலிருந்து நேற்று காலை இரண்டு இறந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன. நேற்று முன் தினம் கடத்திச்செல்லப்பட்ட ரிஸ்வான் என்பவரின் உடலை நேற்று கண்டறிந்ததாக போலீஸ் அறிவித்துள்ளது.

கலவரத்திற்கிடையே உருது மொழி பேசியவர்களை கொலைச் செய்ததற்கு பழிவாங்கும் விதமாக ரிஸ்வான் கடத்திச் செல்லப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது.

திரிபோலியை கைப்பற்றுவதற்காக இறுதிப்போர்

imagesCAS39EZL
திரிபோலி:அதிபர் முஅம்மர் கத்தாஃபியை பதவியிலிருந்து அகற்ற கோரி போராட்டம் நடைபெறும் லிபியாவில் தலைநகரான திரிபோலியை கைப்பற்றுவதற்காக எதிர்ப்பாளர்களும், ராணுவத்தினரும் இறுதிப்போரை நடத்தி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பலத்த குண்டுச் சத்தம் கேட்டதாக நேரில் கண்டோரை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலின் நோக்கமும், இழப்புகளும் தெரியவில்லை. ஒரே நேரத்தில் நகரத்தின் வடக்கு-கிழக்கு-தெற்கு-மேற்கு பகுதிகளிலிருந்து எதிர்ப்பாளர்கள் தாக்குதலை துவக்கியுள்ளனர்.

120 ஹமாஸ் போராளிகள் கைது-இஸ்ரேலின் அடாவடி

1745780
காஸ்ஸா:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவத்தின் அக்கிரமத் தாக்குதல் ஐந்தாவது தொடர்ந்த வேளையில் நேற்று 120 ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.

தெற்கு மேற்கு கரையிலிருந்து இவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக ஃபலஸ்தீன் போலீஸ் அறிவித்துள்ளது. கைதுச் செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் எம்.பி முஹம்மது முத்தலக் அபூஜெய்ஷாவும் உட்படுவார்.

கஷ்மீர்:38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள்

CAKNGGV8
ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீரில் பல்வேறு இடங்களில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை அடக்கம் செய்ததாக மாநில மனித உரிமை கமிஷனின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மூன்று வருடங்களாக நடத்திய நீண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சியடையும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1990 ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்டவர்களின் உடல்கள்தாம் இவை. குண்டடிப்பட்ட காயங்களைக் கொண்ட இந்த உடல்களை மோதல்களில் கொல்லப்பட்ட அடையாளம் காணமுடியாத போராளிகளுடையது என்ற பெயரில் அடக்கம் செய்வதற்காக உள்ளூர்வாசிகளிடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டவை என மனித உரிமை கமிஷனின் சிறப்பு புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.

ஹஸாரேவின் போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது: அருணாராய்

arunaroy230_041711103013
புதுடெல்லி:தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அளித்தபிறகு அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது ஆபத்தானதும், ஜனநாயகத்திற்கு விரோதமானதுமாகும் என அருணா ராயின் தலைமையிலான நேசனல் கேம்பயின் ஃபார் பீப்பிள்ஸ் ரைட் டு இன்ஃபர்மேஷன்(என்.சி.பி.ஆர்.ஐ) குற்றம் சாட்டியுள்ளது.

Sunday, August 21, 2011

தாக்குதல்களுக்கு ஓய்வில்லை: தூதரை திரும்ப அழைத்தது எகிப்து

காஸ்ஸா:சிறிய இடைவேளைக்கு பிறகு ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் அராஜக தாக்குதல் மூன்றாம் நாளான நேற்றும் தொடர்ந்தது. இரண்டு தினங்களிடையே 14 பேர் இரு தரப்பிலும் கொல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உள்பட மூன்றுபேரும், இரவு புரேஜி முகாம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீனர்களும் கொல்லப்பட்டனர் என அல்ஜஸீரா கூறுகிறது.

பட்டினியால் அவதியுறும் சோமாலியாவுக்கு துருக்கி பிரதமர் விஜயம்

khan n
மொகாதிஷு:வறட்சியும்,பட்டினியும் பாடாய்படுத்தும் சோமாலியாவுக்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகானும் குழுவினரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

கடந்த 20 வருடங்களிடையே முதன் முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவர் கலவரபூமியான மொகாதிஷுவுக்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உருதுகானுடன் அவருடைய மனைவியும், ஐந்து காபினட் அமைச்சர்களும் சென்றிருந்தனர். இக்குழுவினரை சோமாலியாவின் அதிபர் ஷேக் ஷெரீஃப் அஹ்மத் மொகாதிஷு விமானநிலையத்தில் வரவேற்றார்.

சுவாமி நிகமானந்தாவின் மரணம்: டாக்டர் மீது வழக்கு

Nigamananda_295
ஹரித்துவார்:கங்கை நதியின் கரையில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சுவாமி நிகமானந்தா மரணித்த வழக்கில் டாக்டர் மற்றும் குவாரி உரிமையாளர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

நிகமானந்தாவிற்கு சிகிட்சையளித்த டாக்டர் பி.கே.பட்நகர் குவாரி உரிமையாளர்களுக்காக அவருக்கு மருந்து செலுத்தி நினைவிழக்கச் செய்ததாக சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இருவர் மீதும் கொலை, சதித்திட்டம் ஆகிய குற்றங்கள் சுமத்தி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் சங்க்பரிவார அமைப்புகளின் 3 நாள் கூட்டம்: முக்கிய முடிவுகள்

புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் 3 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்க்சாலக் மோகன் பாகவத் மற்றும் பா.ஜ.க, ஏ.பி.வி.பி, பி.எம்.எஸ், வி.ஹெச்.பி ஆகிய அமைப்புகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக டெல்லிக்கு போதுமான அளவு சுயம் சேவகர்களை அனுப்ப தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை அரசு எதிர்ப்பு போராட்டமாக மாற்றி அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெறுவதற்கான தந்திரங்களைக் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சோதனையின்போது பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை – ஆஸ்திரேலியா புதிய சட்டம்

HijabREX_228x381
மெல்போர்ன்:போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த சட்டத்தின்படி போலீஸ் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும்.

ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்

imagesCA7JYJEB
புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.

ஹஸாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹஸாரேவின் போராட்டத்தை கொளுக்கச் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

Saturday, August 20, 2011

விடுதலையானார் ஹஸாரே

 
Anna-Hazare-arrested-new-300x225புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவைக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவிருந்த ஹஸாரேவை டெல்லி போலீஸ் கைதுச்செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவரது கைதுக்கு நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த கடும்  எதிர்ப்பை தொடர்ந்து அரசு ஹஸாரேவை விடுதலைச்செய்ய முன்வந்தது.

ஆனால், நிபந்தனையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால்தான் சிறையிலிருந்து விடுதலையாவேன் என ஹஸாரே உறுதியுடன் தெரிவித்திருந்தார்.

தங்கத்தின் விலை 20320


gold-price-increaseசென்னை:ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) பவுன் ரூ.20,032 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் 2,504. புதன்கிழமை (ஆகஸ்ட் 17) பவுன் ரூ.19,928-க்கும் ஒரு கிராம் 2,491-க்கும் விற்பனையானது.31.12.2001-ல் ஒரு பவுன் ரூ.2,224-க்கு விற்பனையானது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் பவுனுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்புக்கு தடை: மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தின் படங்கள்

நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மதுரையில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சரியாக காலை 11 மணிக்கு மீனாட்சி பஜாரில் வைத்து நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் யூசுப் சிறப்புரை ஆற்றினார் . திரளாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்








ராமநாதபுரம் 




ராமநாதபுரத்தில் சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசு பணிமனை முன்பு மாலை 5 மணிக்கு நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஹாலித் முஹம்மத் சிறப்புரை ஆற்றினார்.










Dua For Gaza