புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவைக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவிருந்த ஹஸாரேவை டெல்லி போலீஸ் கைதுச்செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவரது கைதுக்கு நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து அரசு ஹஸாரேவை விடுதலைச்செய்ய முன்வந்தது.
ஆனால், நிபந்தனையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால்தான் சிறையிலிருந்து விடுதலையாவேன் என ஹஸாரே உறுதியுடன் தெரிவித்திருந்தார்.
பின்னர் மத்திய அரசு பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தனது உறுதியை விட்டுக்கொடுத்த ஹஸாரே 15 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இன்று காலை 11.45 மணியளவில் சிறையிலிருந்து அவர் வெளியே வந்தார்.அவருக்கு சிறைக்கு வெளியே பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment