காஸ்ஸா:இஸ்ரேலின் அக்கிரம தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஃபலஸ்தீன் போராளிகள் தாக்குதலை வலுப்படுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலும் நேற்று காலையிலும் தெற்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. மூன்று க்ராட் ராக்கெட்டுகள், கஸ்ஸாம் ராக்கெட், மோட்டார் குண்டுகள் ஆகியவற்றை உபயோகித்து போராளிகள் தாக்குதலை நடத்தினர். சேத விபரம் வெளிவரவில்லை. இஸ்ரேலுடன் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயார் என்ற செய்தி வெளியான சில மணிநேரங்களுக்கு பிறகு இஸ்ரேல் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. போர் நிறுத்தத்திற்கு அனைத்து போராளி அமைப்புகளும் தயாரில்லை என்பதை தான் இச்சம்பவம் உறுதிச்செய்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வித காரணமுமின்றி ஃபலஸ்தீனர்களை கொலைச் செய்துவரும் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாரில்லை என இஸ்லாமிக் ஜிஹாதும், பாப்புலர் ரெஸிஸ்டண்ட் கமிட்டியும் தெரிவித்துள்ளன. ஏராளமான ஃபலஸ்தீன் முஸ்லிம்களை கைதுச்செய்த இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ததற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என பாப்புலர் ரெஸிஸ்டண்ட்ஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் அபூ முஜாஹித் தெரிவித்துள்ளார். காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துவருகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment