Sunday, August 21, 2011

சோதனையின்போது பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை – ஆஸ்திரேலியா புதிய சட்டம்

HijabREX_228x381
மெல்போர்ன்:போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த சட்டத்தின்படி போலீஸ் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும்.

சோதனையின்போது, அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும்.

சோதனையின்போது மட்டுமின்றி நீதிமன்ற விசாரணை மற்றும் சிறைக்கு கைதிகளை பார்க்க செல்பவர்களும் பர்தா மற்றும் முகத்தை மறைக்கும் துணிகளை அகற்ற வேண்டும். அகற்ற மறுத்தால் அபராதம் விதிக்கப்படும்.

இது குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாணத் தலைவர் பார்ரி ஓ பாரெல் கூறுகையில், நான் அனைத்து மதங்களையும் அவற்றை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறேன். அதே நேரத்தில் ஒருவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவே இந்த சட்டம் கொண்டு வரப்படவுள்ளது என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza