கராச்சி:அரசியல் கலவரம் தீவிரமடைந்துள்ள கராச்சியில் இரண்டு குழந்தைகள் உள்பட ஏழுபேர் கொல்லப்பட்டனர். ஒரங்கி நகரத்திலிருந்து நேற்று காலை இரண்டு இறந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன. நேற்று முன் தினம் கடத்திச்செல்லப்பட்ட ரிஸ்வான் என்பவரின் உடலை நேற்று கண்டறிந்ததாக போலீஸ் அறிவித்துள்ளது.
கலவரத்திற்கிடையே உருது மொழி பேசியவர்களை கொலைச் செய்ததற்கு பழிவாங்கும் விதமாக ரிஸ்வான் கடத்திச் செல்லப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது.
சனிக்கிழமை இரவும் மஹ்மூதாபாத்தில் இரண்டு குழந்தைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.
டீன்ஹட்டி பாலத்திற்கு அருகே குண்டடிப்பட்டு மரணித்த நிலையில் இன்னொரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் இம்மாதம் 17-ஆம் தேதி வெடித்த கலவரத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment