ஜம்மு:கடந்த வருடம் கஷ்மீரில் நடந்த அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் பொழுது பாதுகாப்பு அதிகாரிகள் மீது கல்லெறிந்தது உட்பட பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.
பல மாதங்களாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 1200 பேர் சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஈகைத் திருநாளாம் ஈதுல் ஃபித்ர் வருவதையொட்டி பெருநாள் பரிசு இது என்றும், மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இளைஞர்களுக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் உமர் அப்துல்லாஹ் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment