Thursday, August 25, 2011

லிபியா:எதிர்ப்பாளர்களின் லட்சியம் கத்தாஃபியின் பிறந்த நகரம்

web-ANI01-LIBYA_1311953cl-8
திரிபோலி:லிபியாவின் தலைவர் கர்னல் முஅம்மர் கத்தாஃபி ஆட்சிபுரியும் பாபுல் அஸீஸாவின் கோட்டையை கைப்பற்றி ஒரு நாள் கழிந்த பிறகும் கத்தாஃபியையோ அவரது மகன்களையோ கைதுச் செய்ய எதிர்ப்பாளர்களின் ராணுவத்திற்கோ, அவர்களுக்கு எல்லாவித உதவியையும் அளிக்கும் நேட்டோ படையினருக்கோ இயலவில்லை.

புதன்கிழமை காலை அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலும், ரேடியோவும் கத்தாஃபியின் அறிக்கைகளை வெளியிட்டன. அதில் கத்தாஃபியின் குரல் ஒலிபரப்பப்பட்டது. அப்பொழுது அவர் ‘மரணம் அல்லது இரத்தசாட்சி ஏற்படும் வரை போராடுவேன்’ என தெரிவித்தார்.

முன்னர் பல தடவை குண்டுவீசியும், ஏவுகணைகளை ஏவியும் நேட்டோ படையினரால் தகர்க்கப்பட்ட கோட்டையிலிருந்து ராணுவம் தந்திரமான காரணங்களாலேயே வாபஸ் பெற்றது என கத்தாஃபி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே எதிர்ப்பாளர்கள் கத்தாஃபியின் பிறந்த நகரமான ஸிர்த்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இங்கே கத்தாஃபியின் ராணுவமும், உறவினர்களும், பழங்குடியினரும் திரண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

புதன்கிழமை காலை முதல் திரிபோலியில் பல இடங்களிலும் கத்தாஃபி ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களுடன் மோதியதாக செய்திகள் கூறுகின்றன. கோட்டைக்கு உள்ளே இரண்டுதடவை குண்டுவெடித்தது. இது நேட்டோ வீசியது என கருதப்படுகிறது.

கோட்டைக்கு உள்ளே கத்தாஃபி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரிக்ஸோஸ் ஹோட்டலில் 30 வெளிநாட்டு பத்திரிகையாளர்களை கத்தாஃபி ராணுவம் இரவு எட்டரை மணிவரை கஸ்டடியில் வைத்ததாக செய்திகள் கூறுகின்றன. பின்னர் அரபு பத்திரிகையாளர்களின் தலையீட்டின் காரணமாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கத்தாஃபியை பிடிக்கவோ, கொலையோ செய்தால் அவருக்கு 20 லட்சம் லிபியன் தினார் அளிக்கப்படும் என எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza