Monday, August 22, 2011

120 ஹமாஸ் போராளிகள் கைது-இஸ்ரேலின் அடாவடி

1745780
காஸ்ஸா:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவத்தின் அக்கிரமத் தாக்குதல் ஐந்தாவது தொடர்ந்த வேளையில் நேற்று 120 ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.

தெற்கு மேற்கு கரையிலிருந்து இவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக ஃபலஸ்தீன் போலீஸ் அறிவித்துள்ளது. கைதுச் செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் எம்.பி முஹம்மது முத்தலக் அபூஜெய்ஷாவும் உட்படுவார்.

இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக நேற்று முன் தினம் ஹமாஸ் தலைமை அறிவித்தது. வியாழக்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸா முனையில் தொடரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

அதேவேளையில் நேற்று இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் நடத்திய விமானத் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உள்பட ஏழுபேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. காஸ்ஸாவில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை துவங்கியதிலிருந்து இதுவரை 15 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சார்ந்தவர்களின் கொலைக்கு பின்னணியில் தாங்கள் இல்லை என ஹமாஸின் தலைமை தெரிவித்தபோதும் இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza