சென்னை:ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) பவுன் ரூ.20,032 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் 2,504. புதன்கிழமை (ஆகஸ்ட் 17) பவுன் ரூ.19,928-க்கும் ஒரு கிராம் 2,491-க்கும் விற்பனையானது.31.12.2001-ல் ஒரு பவுன் ரூ.2,224-க்கு விற்பனையானது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் பவுனுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
இது குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கச் செயலாளர் சுல்தான் கூறியதாவது:
அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கையால், இப்போது அந்நாடு மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. இதனால் அமெரிக்காவின் டாலரை கொள்முதல் செய்த நாடுகள் தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அதிக அளவில் டாலரை கையிருப்பாகக் கொண்ட சீனா உள்ளிட்ட நாடுகள் இப்போது தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறது.
இதன் காரணமாக தங்கத்தின் தேவை இப்போது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதுதான் தங்கத்தின் தொடர் விலை உயர்வுக்கு காரணம் என்றார் சுல்தான்.
இதே கருத்தை தெரிவித்துள்ள பல்வேறு வியாபாரிகள், தீபாவளிக்குள் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை எட்டும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment