Friday, September 30, 2011

அணுஆயுதத்தை சுமந்து இலக்கை தாக்கும் அக்னி II ஏவுகணை சோதனை வெற்றி!

agni-2
புவனேஸ்வர்:அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு  இலக்கை தாக்கவல்ல அக்னி II ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒரிசா மாநிலம் வீலர் தீவில் உள்ள சோதனை வளாகத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு இலக்கை நோக்கி செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டது.  சுமார் 2,000 கிலோமீட்டர் தூரத்துக்குச் சென்று குறிப்பிட்ட இலக்கை அக்னி II ஏவுகணை கச்சிதமாக தாக்கி அழித்தது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தினர்.

கர்நாடகா:பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி

sdpi won karnataaka pavur

மங்களூர்:கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதி பாவூர் கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி பெற்றது. SDPI வேட்பாளர் ஜனாப் நாசிர் 150 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.

நாசிருக்கு 536 வாக்குகள் கிடைத்தபோது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரால்  386 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவியா?

anna
மும்பை:அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. அந்த பதவிக்கு ஆளும் கூட்டணியின் வேட்பாளராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அன்னாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் புனேயில் இருந்து வெளியாகும் மராத்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலும் பர்தாவுக்குத் தடை!

swiss ban hijab
பெர்ன்:பிரான்ஸ்,பெல்ஜியம் நெதர்லாந்தை தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக காரணங்காட்டி  பர்தாவுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

பொது இடங்கள், பொது போக்குவரத்தின் போது, முகத்தை மூடி அணியும் பர்தா அணிவதற்கு தடைவிதிக்கும் சட்ட மூலம் சுவிட்சர்லாந்தில் பர்தா தடை அமுலுக்கு வருகிறது.

இஸ்லாமிய இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியின் சென்னை, ஈரோடு மேயர் வேட்பாளர்களாக SDPI வேட்புமனு தாக்கல்

select 3
சென்னை:தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், SDPI,  விடுதலைச் சிறுத்தைகள், கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவை இணைந்து கூட்டணியாகவும்; திமுக, அதிமுக, காங்கிரஸ் பாமக, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தனித்தனியாகவும் தேமுதிக மற்றும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.

இன்று[செப்-30] உலக இதய நாள் [World Heart Day] : ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிக்கிறார்

world-heart-day-2011

துபாய்:இன்று உலக இதய நாள்(World Heart Day), ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிப்பதாக அமீரக ஆரோக்கியத் துறை அறிவித்துள்ளது.

19% மக்கள் மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சி செய்வதாகவும் அது கூறியுள்ளது.

இன்று உலகில் மாரடைப்பே ஆட்கொல்லி நோயாக மனிதர்களை பயமுறுத்தி வருகிறது,  அதிகமான மக்கள் இருதய  சம்பந்தமான நோய்களிலாயே மரணிப்பதாக உலக சுகாதார துறையும் அறிவித்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம், உடலில் உள்ள சிதையா கொழுப்பு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்,போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால்தான் இருதய சம்பந்தமான நோய்கள் தாக்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.

Thursday, September 29, 2011

மனித உரிமையை புரட்டிப்போட்ட 19 ஆண்டுகால வாச்சாத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

Vachaathi
தருமபுரி:வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்தது, கிராம மக்களிடம் அத்துமீறியது உள்ளிட்ட வழக்குகளில் இந்திய வனத்துறை அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.  குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட அனைவருக்கும் நீதிபதி நேற்று மாலை தண்டனையை அறிவித்தார்.

19 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் வழங்கப்படும் தீர்ப்பு என்பதால், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

வாச்சாத்தி வழக்கில் 4 அதிகாரிகள் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் – தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு!

Vachaathi
தருமபுரி:வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

19 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் வழங்கப்படும் தீர்ப்பு என்பதால், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது

imagesCA36LMJP
சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

பெண்கள் போர்க்களத்தில் – ஆஸி. அரசு அனுமதி

imagesCA7XNIIF
சிட்னி:ஆஸ்திரேலியப் படையில் உள்ள பெண் ராணுவத்தினர் போர்களத்துக்குச் செல்வது உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியாற்ற அனுமதிப்பது என ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல்,கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தான் இதுவரை பெண்களை போர்முனைக்கு செல்லும் பணிகளில் சேர்த்து வந்தன.

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது

rahiya

கொல்கத்தா:ரஹீயா காத்துன்,பத்தாம் வகுப்பு படிக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணவி,தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருதை பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் இருந்து “National Level Exhibition and Project Competition”–ல் பங்கெடுத்த மாநில சாம்பியனாக இடம் பெற்ற ரஹீயா காத்துன் “INSPIRE Award 2011″-க்கான விருதை பெற்றார்.

‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு

_42215362_afzalafp203jpg

ஸ்ரீநகர்:2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாரளுமன்ற தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு, சவுகத் குரு, சவுகத் குருவின் மனைவி அப்ஷான் குரு மற்றும் டெல்லி பல்கலைகழத்தின் ஆசிரியர் அப்துர் ரஹ்மான் கிலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் உச்சநீதி மன்றம் அப்சல் குருவின் மரண தண்டனையை உறுதி செய்தும், ரஹ்மான் கிலானி மற்றும் அப்ஷான் குருவை விடுதலை செய்தது.

சவுகத் குரு தனது பத்து ஆண்டு காலம் சிறை தண்டனையை முடித்து விட்டு சமீபத்தில் விடுதலையானார். இதனைத் தொடர்ந்து வடக்கு கஷ்மீரில் சோபோர் நர்சிங் ஹோமில் வரவேற்பாளராக பணி புரியும் அப்சல் குருவின் மனைவி தபசம் குரு, தனது கணவனுக்காக கருணை மனுவை சமர்பித்துவிட்டு காத்திருக்கும் அவர், தனது கணவனின் தலை விதியை அல்லாஹ்வின் கைகளில் ஒப்படைத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, September 28, 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி

310560_156600207764135_100002424713418_275998_821129468_n

சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

இந்தக் கூட்டணியில்

2ஜி வழக்கில் சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் சிபிஐ

p_chidambram_20050228

டெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று கோரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது – மத்திய திட்டக் குழு

imagesCA2CT4MO

டெல்லி:நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று  மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.

பழச்சாற்றில் புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகம்: ஆஸ்திரேலிய ஆராய்ச்சி மையம் அதிர்ச்சித் தகவல்

imagesCAE2Z0JT
லண்டன்:பழச்சாற்றை பருகி தன்னுடைய தினத்தை ஆரம்பிப்பவர்களுக்கு, பாதுகாப்பிற்குப் பதிலாக அதில் உள்ள உயர்ந்த சர்க்கரை தன்மை புற்று நோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக லண்டன் டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று இளைஞர்கள் அதிகமாக விரும்பும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை தன்மை புற்று நோய்க்கு வழி வகுக்கிறது. எவர் ஒருவர் தினம் ஒன்றுக்கு, மூன்றுக்கு மேற்ப்பட்ட டம்ளர் பழச்சாறை பருகுகிறார்களோ அவர்களுக்கு மலக்குடல் புற்று நோய் வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Tuesday, September 27, 2011

‘கஷ்மீர் மக்களின் துன்பம் என்னுடைய துன்பம்’- ராகுல் காந்தி

imagesCA061667
ஸ்ரீநகர்: “நான் ஒரு கஷ்மீரீ,நான் இங்கு அரசியல் பேசுவதற்காக வரவில்லை, உங்களின் வலியும்,வேதனையும் என்னுடையது” என்று பல்கலைகழகத்தில் மாணவர்களுக்காக உரையாடிய ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இளைஞர்களை தங்கள் கட்சியில் இடம்பெற வைப்பதற்காக ஜம்மு மற்றும் கஷ்மீருக்கு 2 நாள் பயணம் மேற்க்கொண்டுள்ளார். அப்போது பல்கலைகழகம் ஒன்றில் மாணவர்களிடம் பேசிய அவர், “என்னுடைய பாட்டி நான் 14 வயதாக இருக்கும்போதும், என்னுடைய தந்தை நான் 21 வயதாக இருக்கும் போதும் கொல்லப்பட்டனர். என்னாலும் வலியை புரிந்துக் கொள்ள முடியும், நான் இங்கு அரசியல் பேச வரவில்லை, நான் இங்கு வந்திருப்பது என்னால் எந்த அளவுக்கு உங்களுக்கு உதவ முடியும் என்று கற்றுக் கொள்வதற்காக” என்றர்.

‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?

imagesCA8RD1HR
வாஷிங்டன்:’கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத் தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஆப்கானிஸ்தான் காபூலில் கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான்.

நோபல் பரிசு வென்ற வங்காரி மத்தாய் மரணம்

nobel-laureate-wangari-maathai
நைரோபி:அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வங்காரி மத்தாய் புற்றுநோயால் மரணமடைந்தார்.

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனளின்றி இன்று காலமனார். அவருக்கு வயது 71.

சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அரும் பணியாற்றியதற்காக, அவருக்கு 2004-ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு வழங்கபப்பட்டது.

மனித உரிமையை புரட்டிப்போட்ட வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு செப்.29-க்கு ஒத்திவைப்பு

judgeHammer
தருமபுரி:தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாபட்டப்பட்டிருந்த மூன்றுபேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வாதாடினர்.

Monday, September 26, 2011

உள்ளாட்சித் தேர்தல் – ஒரு முழுமையான விவரம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை தனித்தனியே தேர்தல் களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 17-ந் தேதி முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.

தமிழக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக அக்டோபர் 17-ந் தேதி 9 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், அதற்கு உள்பட்ட ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது.

தனித் தெலுங்கானா போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

imagesCAXL7XIX
ஹைதராபாத்:தனித் தெலுங்கானா கோரி அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழு திங்கட் கிழமையன்று ரயில் மறியல் போராட்டம், காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகளின் வீடுகளை முற்றுகையிடுதல் மற்றும் ஹைதராபாத் முழுவதும் முழு அடைப்பு உட்பட பல போராட்டங்களை தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தற்போது நடைபெற்று வரும் “சமூகத்தின் அனித்து தளத்திலிருந்தும் போராட்டம்” என்ற கட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் கர்பலாவில் தொடர் குண்டு வெடிப்பு : 16 பேர் மரணம்

Residents look at burnt motorbikes at the site of multiple bomb attacks in Kerbala

பாக்தாத்:ஈராக்கின் புனித நகரமான கர்பலாவில் அரசாங்க கட்டிடத்துக்கு அருகில் தொடர் குண்டு வெடித்ததால் 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அடையாள அட்டை மற்றும்  பாஸ்போர்ட் வாங்குவதற்கு வந்த காவலர்களும் பொதுமக்களும் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
முதலில் ஒரு  குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ராணுவமும் மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். அவ்வேளையில் அவர்களை குறிவைத்து மீண்டும் 3 குண்டுகள் வெடித்துச் சிதறியது.

குஜராத் ஆளுநரை நீக்கக் கோரி மோடி யாத்திரை செய்ய முடிவு

Narendra_modi
அஹ்மதாபாத்:கடந்த செப்டம்பர் 6 முதல் குஜராத்தில் பிஜேபி நடத்திவரும் பல நாடகங்கள் ரத யாத்திரையில் முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது. யாத்திரை அஹ்மதாபாத்தின் தெற்குப் பகுதியிலுள்ள வஸ்த்றல் என்னும் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

குஜராத் ஆளுநர் கமலா பணிவால் மோடியின் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மோடி அரசால் கடந்த ஏழு வருடங்களாக யாரையும் தலைவராக நியமிக்காமல் கிடப்பில் போடப்பட்டு வைத்திருந்த லோகயுக்தாவிற்கு பணி ஓய்வு பெற்ற ஆர்.ஏ.மேத்தாவை தலைவராக நியமித்ததற்காக ஆளுநரை திரும்பப் பெறக் கோரியும்,  முறைசாரா அமைப்புகளிடம் செயல் விளைவு கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் மற்றும் குஜராத் நிர்வாகத்தில் பெண்கள் கோட்டாவை அதிகரிப்பது ஆகிய மூன்று பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநருடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் மோடி யாத்திரை மேற்கொண்டு ஆளுநருக்கு எதிராக மக்களிடம் ஆதரவு கோரப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோபல்கர் கலவரம் – ராஜஸ்தான் உள்துறை அமைச்சரின் பதவிக்கு ஆபத்து

imagesCAKA2I01
புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்நகர் மாவட்டத்தில் உள்ள கோபல்கர் பகுதியில் நடந்த மதக் கலவரத்தில் போலீஸாரின் அத்துமீறல் மற்றும் கலவரத்தை தடுப்பதில் மாநிலத்தின் தோல்வி ஆகியவை குறித்து காங்கிரசின் உண்மை கண்டறியும் குழு அளித்துள்ள அறிக்கையின் விளைவாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி ஈத்கா பள்ளியின் இடப் பிரச்னை தொடர்பாக குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் 9 முஸ்லிம்கள் இறந்துள்ளனர் மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கோபல்கரின் சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மூன்று கலவரங்கள் நடைபெற்றுள்ளதால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது காங்கிரஸ் மேலிடம் அதிர்ப்தியில் உள்ளது.

‘பிற நாட்டின் உள்நாட்டுப் புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்த​ல்

Manmohan_-_UNGA_790920e
ஐ.நா.சபை:சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.

அப்பாவி இளைஞர் தீவிரவாதியா​க கைது – போராட்டத்துக்குப் பின் விடுதலை

புதுடெல்லி:ஆஜம்கர் நகரைச் சேர்ந்த மஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஒரு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் காணாமல் போனார். தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்பு குற்றமற்றவர் என்று கடந்த சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ம‌ஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஆஜம்கர் நகரில் சிபிலி நேஷனல் கல்லுரியில் பணி புரிந்து வந்தார். ஆடிடிங் கணக்கு ஆவணங்களை பெற்று வருவதற்காக கல்லூரி நிர்வாகம் அவரை வாரணாசிக்கு அனுப்பியது.

Sunday, September 25, 2011

நேபாளத்தில் சுற்றுலா விமான விபத்து – 8 தமிழர்கள் உட்பட 19 பேர் பலி

131238ap_nepal_plane_crash_081008_mn
காத்மாண்டு:நேபாளத் தலைநகர் காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் பனி மூட்டத்தில் சிக்கி சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது. இதிலிருந்த விமான ஊழியர்கள் மூன்று பேர் உட்பட அதில் பயணம் செய்த 16 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர்.

16 சுற்றுலாப் பயணிகளில் 12 பேர் இந்தியர்கள், இவர்களில் 8 பேர் தமிழர்கள், திருச்சியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியர்கள்.

இந்தியா:ஷௌரியா ஏவுகணை சோதனை

India Missile Test
பாலசோர்(ஒரிசா):அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷௌரியா ஏவுகணையை இந்தியா சோதனையிட்டது.

ஒரிசா எல்லையிலுள்ள பாலசோரிலிருந்து 15கி.மீ. தூரத்திலுள்ள சந்திப்பூர் ஏவுகணைத் தளத்தில் இந்த ஏவுகணை சோதனை நடந்தது. இது இரண்டாவது சோதனையாகும். முதல் சோதனை 2008 நவம்பர் 12 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

“என் தந்தைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்!”: ஆயிஷா கதாபி வேண்டுகோள்

aisha-daughter-gaddafi
திரிப்போலி:லிபிய அதிபர் கதாபியின் மகள் ஆயிஷா கதாபி தன் தந்தை இன்னும் வீர தீரத்துடன் தன் சகாக்களுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு முழு ஆதரவு தரவேண்டும் என்றும் லிபிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 4 நிமிடம் அவர் பேசிய ஒலிப்பதிவு நேற்று தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்பட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் கதாபியின் ஆதிக்கத்திலிருந்து லிபியா விடுபட்டுப்போன பின் முதன் முதலாக அவருடைய மகள் ஆயிஷா கதாபி தன் தந்தைக்காக ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார். 

மக்கள் முன்னிலையில் ஒரிசா எம்.எல்.ஏ சுட்டுக்கொலை

orisa mla
புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜக்பந்து மஜி இன்று மர்ம நபர்களால் பொதுக்கூட்டம் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் அவரது மெய்க்காவலரும் பலியானார். இவர் உமர்கோட் என்ற தொகுதிக்காக ஒரிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

உலகப் பொருளாதாரம்​ ஆபத்தான நிலையில்: உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை

imagesCASE9D1B
வாஷிங்டன்:உலக பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்து மீண்டெழுவது, அதற்கான நடவடிக்கை எடுப்பது பற்றிய மாநாடு வாஷிங்டனில் நடந்தது.

அதில் கலந்து கொண்ட உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக் பேசுகையில்; ‘நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழி மிகவும் சிக்கலாகவே உள்ளது. அதனால் தற்போது உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது. 

ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு

Flag-Pins-India-Palestine
ஐ.நா.பொதுச்சபை:அமெரிக்கா ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினருக்கான கோரிக்கையை நிராகரித்து வரும் நிலையில் இந்தியா ஃபலஸ்தீன உறுப்பினர் கோரிக்கைக்கு தன்னுடைய முழுமையான பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழனன்று ஐ.நாவிற்கு வருகை புரிந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 19  ஆம் தேதி ஃபலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிற்கு அனுப்பிய கடிதத்தில் ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினர் கோரிக்கைக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

9/11 தாக்குதல் அமெரிக்காவின் சொந்த சூழ்ச்சித் திட்டம் – ஐ.நா சபையில் ஈரான் அதிபர் ஆவேசப் பேச்சு

najed
நியூயார்க்:ஐ.நா பொது சபையில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஈரான் அதிபர் முஹம்மத் அஹமத் நஜாத் ஆவேசமாக பேசினார்.

ஒசாமா பின்லாடனை கொன்று, அவர் உடலை கடலில் எறிந்த செயலை கடுமையாக விமர்சித்த அவர், அது செப்-11  தாக்குதல் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களை மூடி மறைப்பதற்க்காகத்தான் செய்யபட்டது என்றும் கூறினார்.

ஒவ்வொரு இரவும் 100 கோடி பேர் உணவு கிடைக்காமல் பசியுடன் தூக்கம்

untitledss
போதிய சத்துணவுகள் இல்லாமல் பசியால் வாடுபவர்களைவிட, உடல் பருமன் காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு (ஐ.எப்.ஆர்.சி.) தெரிவித்துள்ளது.

தற்போது உலக அளவில் ஒவ்வொரு இரவும் 100 கோடி பேர் போதிய உணவு கிடைக்காமல் பசியுடன் தூங்குகின்றனர். ஆனால், சத்துணவு கிடைக்காமல் இறப்பவர்களைவிட, உடல் பருமனால் ஏற்படும் நோய் நொடிகளால் இறப்பவர்களே அதிகம்.

Saturday, September 24, 2011

மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு

imagesCA576F3P
நியூயார்க்:மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் இஸ்ரேல் தான் என்று ஐ.நா சபை கூட்டத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.

இஸ்ரேல்–ஃபலஸ்தீன் பிரச்னையை தீர்ப்பதில் உலக நாடுகளுக்கு அக்கறை இருக்குமானால் இஸ்ரேலின் அடாஅவடிப் போக்கை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது என்று கூறினார்.

ஒபாமா செல்வாக்கு வீழ்ச்சி!

imagesCAAJFA1M
நியூயார்க்:அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கருத்துகணிப்பு ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக  ஒபாமாவின் செல்வாக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவலாக சரிந்த நிலையில் உள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளும் தனித்துப் போட்டி

imagesCA6F0VCA
சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பல கட்சிகளும் போட்டியிடும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. கூட்டணியை மதிக்காமால் தனித்துப் போட்டியிடுவதாக திமுக அறிவித்தது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று அது கூறியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமையில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு பற்றிய முக்கிய தீர்மானம் ஓன்று நிறைவேற்றபட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த 16-க்கும் மேற்ப்பட்ட முக்கிய தாக்குதலுக்கு பின்னால் ஹிந்துத்துவ அமைப்பு: டி.ஐ.ஜி மாநாடு

hindutva-terrorism
புதுடெல்லி:நாட்டில் நடைபெற்ற பதினாறுக்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் தான் காரணம் என டி.ஐ.ஜிக்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகள்(1&2 )ஆகிய முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஹிந்துத்துவா அமைப்புகளே முக்கிய காரணமாக உள்ளது என்று டெல்லியில் நடைபெற்ற டி.ஐ.ஜிக்களின் ஆண்டு  மாநாட்டில் புலானாய்வுக் குழுவின் சிறப்பு இயக்குநர் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் வெளிநாட்டை சேர்ந்த வலது சாரி நிறுவனம் -சி.பி.ஐ

22-babri-masjid
புதுடெல்லி:1992-ல் நடைபெற்ற பாபர் மஸ்ஜித் இடிப்புக்கான பணம் அனைத்தையும்  வெளிநாட்டைச் சேர்ந்த வலதுசாரி நிறுவனம் வழங்கியிருப்பதாக ஒரு புதிய அறிக்கையை சிறப்பு புலானாய்வுக் குழு(சி.பி.ஐ) கண்டறிந்ததோடு, இந்த பணம் ஹவாலா ஊடகம் வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதில் அதிக அளவில் பணம் புலங்கப்பட்டு இருப்பதாகவும் சிறப்பு புலானாய்வு குழுவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனிலவு முறிந்தது:அதிமுக-தேமுதிக உறவில் விரிசல்

vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands
சென்னை:தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் பலவிதமான பிரச்சனைகளுக்கு பின் இருக்கட்சிகளும் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தது, அமோக வெற்றியும் பெற்றது.

இப்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கூட்டணி கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்காமல், ‘அம்மையார்’ அனைத்து  இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து அனைவருக்கும் அதிரடி ‘ஷாக்’ அளித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன தேமுதிக பலவித முயற்சிகளையும் எடுத்துப் பார்த்தது. எதுவும் பயனளிக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக இப்போது அறிவித்துள்ளது.

அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி

Mehbooba-Mufti-story_pic
ஸ்ரீநகர்:பாருளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் கஷ்மீர் மாநில சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் மெஹ்பூபா முப்தி அறிவித்துள்ளார்.

அக்கட்சியின்  சட்டசபை கட்சி கூட்டத்திற்கு பின்பு இதை அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கண் தானம் செய்த பட்டோடி!

untitled
டெல்லி:பட்டோடி 20-வது வயதில் கார் விபத்தில் தனது வலது கண்ணை இழந்தார். அதன்பிறகு, இதுவரை 1.5 லட்சம் பேருக்கு பார்வைக் கிடைத்திட அவர் உறுதுணை புரிந்ததுடன், இறப்புக்கு முன்பு கண் தானம் செய்து தனது சேவையைத் தொடர்ந்தது நெகிழ்வுக்குரியது.

டெல்லி மருத்துவமனையில் வியாழக்கிழமை மரணமடைந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் உடல் அவரது சொந்த ஊரான பட்டோடி கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

Friday, September 23, 2011

தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம்

burqa7_11042011
பாரீஸ்:பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் பர்தா உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறி பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு முதன்முதன்முறையாக பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இதுவரை தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்

மனிதர்களில் மிக இரக்கமானவர்கள் முதியோர்கள். மரியாதைக்குறியவர்களும் அவர்களே.ஆனால் இன்று எல்லா பெரியவர்களும் மதிக்கப்படுகிறார்களா என்று பார்த்தால்,இல்லை.பெரும்பாலான பிள்ளைகள் வயது முதிர்ந்த தன் பெற்றோர்களை மதிப்பதில்லை.அன்பும் அறவணைப்பும் கொடுப்பத்தில்லை.அதற்கு பதில் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர்.அங்கு சேர்த்து விட்டு பின் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.அவர்களின் நிலை இன்று மிகவும்  கவலைகிடமாக உள்ளது என்பது தான் நாம் அனைவரும் தவிர்க்க முடியாத உண்மை.இதன் அடிபடையிலே புதுவலசையில் 23.9.2011 வெள்ளிகிழமை அன்று அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ பள்ளியின் ஜும்ஆ பயானில் சகோதரர் இஸ்மாயீல் ஆலிம் அவர்கள்  இக்காலத்தில் முதியோர்களின் நிலை என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.முதியோர்களின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கி கூறினார்கள்.

சமீபத்தில் தினமணி7 என்னும் நாழிதளின் நடுபகுதியில் ஒரு செய்தி அதாவது சமூக சீரழிவு என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிடப் பட்டிருந்தது.அதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி குறிப்பிட்டிருந்தனர்.சென்ற ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7 கோடியே 62 இலட்ச்சம் முதியவர்கள் இருந்தனர்.இதில் பாதி பேர் முதியோர் இல்லத்தில் உள்ளனர்.பாதி பேர் அன்புக்கு ஏங்க குடியவர்களாக இருக்கின்றனர்,என்ற செய்தியை குறிப்பிட்டிருந்தனர்.இன்றைக்கு நம் நாட்டில் முதியோர் காப்பகங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றது.அன்பும்,மனித நேயமும் கெட்டுப் போன மேலை நாடுகளில் தான் இது போன்ற பரிதாபமான செயல்கள் நடந்து கொண்டிருந்தது.இன்று இங்கு நம் நாட்டிலும்,கிராமங்களிலும் கூட இது போன்ற பாவச்செயல்கள்  நடக்கின்றன.

Dua For Gaza