Wednesday, September 28, 2011

பழச்சாற்றில் புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகம்: ஆஸ்திரேலிய ஆராய்ச்சி மையம் அதிர்ச்சித் தகவல்

imagesCAE2Z0JT
லண்டன்:பழச்சாற்றை பருகி தன்னுடைய தினத்தை ஆரம்பிப்பவர்களுக்கு, பாதுகாப்பிற்குப் பதிலாக அதில் உள்ள உயர்ந்த சர்க்கரை தன்மை புற்று நோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக லண்டன் டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று இளைஞர்கள் அதிகமாக விரும்பும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை தன்மை புற்று நோய்க்கு வழி வகுக்கிறது. எவர் ஒருவர் தினம் ஒன்றுக்கு, மூன்றுக்கு மேற்ப்பட்ட டம்ளர் பழச்சாறை பருகுகிறார்களோ அவர்களுக்கு மலக்குடல் புற்று நோய் வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் 2,200-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் உட்படுத்தப்பட்டு, அவர்களின் தினசரி உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேள்வி எழுப்பியதில், இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் எவ்விதத்தில் நோயை வளர்த்துள்ளனர் என்பது பற்றி கண்டறியப்பட்டது என்று அமெரிக்கன் டயடெடிக் சங்கம் ஊடகங்களுக்கு அறிவித்தது.

பழங்களை சாறாக்காமல் யார் முழுதாக சாப்பிடுகிரார்களோ அவர்களுக்கு புற்று நோய் வருவதை தடுக்கும் வாய்ப்பும்,  பழச்சாறாக அருந்துபவர்களுக்கு அதில் உள்ள சர்க்கரை தன்மை புற்று நோய்க்கான கட்டியை தூண்டிவிடும் வாய்ப்பை அதிகபடுத்துகிறது என்றும், பழத்தை சாறாக மாற்றும் போது அதில் உள்ள வைட்டமின் சி, பைஃபர்(fibre) மற்றும் வேதிசத்துக்கள் ஆகியவற்றை இழக்க நேரிடுகிறது என்றும் தெரிவித்தனர்.

பழங்களை பேக்கிங் செய்யும் முறையினால் அதனுடைய பயன்கள் உடம்பில் உள்ள கட்டிகளுக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால் புற்று நோயை உண்டாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பல வித பழங்களில் இருந்தும், காய்கறிகளில் இருந்தும் கிடைக்க கூடிய நன்மைகளை எவ்வாறு பெறுவது என்பது பற்றியும், மலக்குடல் புற்று நோயில் இருந்து எப்படி பாதுகாப்பு பெறுவது என்றும் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza