புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜக்பந்து மஜி இன்று மர்ம நபர்களால் பொதுக்கூட்டம் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் அவரது மெய்க்காவலரும் பலியானார். இவர் உமர்கோட் என்ற தொகுதிக்காக ஒரிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர் ஆளும் பிஜு ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் ராஜ்கார் அருகே பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் முதலில் மெய்காப்பாலரையும், அடுத்து எம்.எல்.ஏவையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பட்டப்பகலில் மக்கள் மத்தியில் நடந்த இப்படுகொலை சம்பவம் ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment