Friday, September 23, 2011

ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்

மனிதர்களில் மிக இரக்கமானவர்கள் முதியோர்கள். மரியாதைக்குறியவர்களும் அவர்களே.ஆனால் இன்று எல்லா பெரியவர்களும் மதிக்கப்படுகிறார்களா என்று பார்த்தால்,இல்லை.பெரும்பாலான பிள்ளைகள் வயது முதிர்ந்த தன் பெற்றோர்களை மதிப்பதில்லை.அன்பும் அறவணைப்பும் கொடுப்பத்தில்லை.அதற்கு பதில் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர்.அங்கு சேர்த்து விட்டு பின் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.அவர்களின் நிலை இன்று மிகவும்  கவலைகிடமாக உள்ளது என்பது தான் நாம் அனைவரும் தவிர்க்க முடியாத உண்மை.இதன் அடிபடையிலே புதுவலசையில் 23.9.2011 வெள்ளிகிழமை அன்று அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ பள்ளியின் ஜும்ஆ பயானில் சகோதரர் இஸ்மாயீல் ஆலிம் அவர்கள்  இக்காலத்தில் முதியோர்களின் நிலை என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.முதியோர்களின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கி கூறினார்கள்.

சமீபத்தில் தினமணி7 என்னும் நாழிதளின் நடுபகுதியில் ஒரு செய்தி அதாவது சமூக சீரழிவு என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிடப் பட்டிருந்தது.அதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி குறிப்பிட்டிருந்தனர்.சென்ற ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7 கோடியே 62 இலட்ச்சம் முதியவர்கள் இருந்தனர்.இதில் பாதி பேர் முதியோர் இல்லத்தில் உள்ளனர்.பாதி பேர் அன்புக்கு ஏங்க குடியவர்களாக இருக்கின்றனர்,என்ற செய்தியை குறிப்பிட்டிருந்தனர்.இன்றைக்கு நம் நாட்டில் முதியோர் காப்பகங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றது.அன்பும்,மனித நேயமும் கெட்டுப் போன மேலை நாடுகளில் தான் இது போன்ற பரிதாபமான செயல்கள் நடந்து கொண்டிருந்தது.இன்று இங்கு நம் நாட்டிலும்,கிராமங்களிலும் கூட இது போன்ற பாவச்செயல்கள்  நடக்கின்றன.

அன்புக்கு ஏங்கக்கூடிய முதியோர்களின் அவல நிலையை போக்கவும்,அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதைப் பற்றியும் இஸ்லாம் 5 விசயங்களின் மூலம் நமக்கு சொல்லிக் காட்டுகின்றது.

1. மேலை நாடாக இருக்கட்டும்,அண்டை நாடாக இருக்கட்டும்,ஏன் நம் நாடாகவும் இருக்கட்டும் முதலில் பிள்ளைகள் தம் பெற்றோர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.மரியாதை செலுத்த வேண்டும்.அவர்களின் அருமையை உணர்ந்து நடக்க வேண்டும்.அவர்களின் அருமையை விளங்கி அவர்களின் மனது கோணாமல் நடக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையிலே மனிதனை நோக்கி இவ்வாறு கூறுகின்றான்,
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
 17:23 அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும்உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!என்று.
அல்லாஹ் தன்னை வணங்கும் படியும் இணைவைக்க கூடாதென்றும் மனிதனுக்கு கட்டளையிடுகின்றான்.ஷிர்க் என்னும் இணைவைப்பானது மாபெரும் குற்றமாகும்.அக்குற்றத்திற்கு அடுத்த குற்றமாக முதியோர்களை அவமதிப்பதை குறிப்பிடுகின்றான்.எனவே அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
 رَّبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ ۚ إِن تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا
17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
நபி(ஸல்)அவர்களிடம் ஒரு சஹாபி தன் ஏழாத தாய்க்கு பணிவடை செய்வதை பற்றி கூறினார்,"நபியே!நான் என் தாய்க்கு ஊட்டி விடுகின்றேன்,சுத்தம் செய்து விடுகின்றேன்,வெளியில் தூக்கிச்செல்கின்றேன்.எனது பெற்றோர்க்கு செய்யும் கடமையை நான் நிறைவேற்றி விட்டேனா என்று கேட்டார்." அதற்கு நபியவர்கள் ,"இல்லை.100 ல் 1 பங்கு தான் நீ செய்கிறாய்.உன் தாய் முதுமை அடைந்துவிட்டதன் காரணமாக அவரின் மவ்த்தை எண்ணி நீ பணிவடை செய்கிறாய்.ஆனால் உன் தாயோ உன்னை நீ வளர்ந்து பெரியவனாக வேண்டும் என்பதற்காக உன்னை பெற்று உனக்கு பாலூட்டி,சோறூட்டி,சுத்தம் செய்கிறாள்.எனவே நீ உன் தாய்க்கு செய்த உதவியை பரிபூரனமாக செய்தவனாக மாட்டாய்."என்று கூறினார்கள்.
இன்னொரு சமயம் நபி(ஸல்)அவர்களின் சபையில் ஒரு பஞ்சாயத்து வருகிறது.நபித் தோழர் ஒருவர்,"நபியே!நான் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று என் சட்டையை கழற்றி வைத்தால் என் தந்தை என் சட்டை பையிலிருக்கும் காசுகளை எடுத்து கொள்கிறார்."என்று.இதை விசாரிக்க வேண்டுமா என்ற மன அழுத்தம் கூட நபிக்கு ஏற்பட்டது.எனினும் அவர்கள்,"உன் தந்தையை கூட்டி வா என்று சொன்னார்கள்". அவரின் தந்தை வந்தார்.மிகவும் வயதாகி,ஊண்டு கோளின் உதவியோடு நடந்து,குழுகுழுத்துப் போன உடம்புடன் அவர் காணப்பட்டார்.தந்தையிடம் நபியவர்கள் "உம் மகனின் காசுகளை நீர் எடுகின்றீர் என உங்கள் மகன் உங்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டார்கள்."அதற்கு தந்தை எனக்கு இக்காசை எடுக்க உரிமை இல்லையா?நான் என் மகனை பெற்று வளர்க்க அரும்பாடு பட்டிருக்கின்றேன்."என்று கூறினார்.அதன் பின் நபியவகள்,"கேட்டீரா தோழரே!உன் தந்தையின் பேச்சை.இவர் பேசியதை ஒரு கல் கேட்டிருந்தால் கரைந்து போயிருக்கும்."என்று கூறினார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தன் பெற்றோரின் அருமையை அறிய வேண்டும்.இதை விளங்கி நடந்தாலே முதியோர் காப்பகங்கள் மூடப்பட்டுவிடும்.வயது முதிர்ந்த பெற்றோர்கள் அன்புக்காக ஏங்க மாட்டார்கள்.
அலீ(ரழி) அவர்களிடம் ஒரு முதியவர் ,"கலீஃபாவே என் மகன் என்னை வீட்டை விட்டு வெளியேர சொல்கின்றான்.அது நான் சம்பாதித்த வீடு.நான் எங்கே செல்வேன்."என்று.அலீ(ரழி) அவர்கள் அம்மகனை அழைத்து,"உன் தாயின் கருவறையில் உனக்கு இடமில்லை என்று கூறியிருந்தால் நீ இவ்வாறு இங்கு நின்று பேசியிருக்க மாட்டாய்"என்று கூறினார்கள்.
தொழுகை தூக்கத்தை விட மேலானது.வணக்கம் மனிதனை நேர்வழியில் கொண்டு செல்லக் கூடியதாகும்.வணக்கமானது சொர்க்கத்தின் திறவுகோலாகும்.ஜிகாத் என்னும் அறப்போர் வணக்கமானது அனைத்தையும் விட மேலானது.அதே போன்று முதியவர்களையும்,பெற்றோர்களையும் அன்போடும்,அறவணைப்போடும் பார்த்துக் கொள்வதும் மேலானதாகும். முதியவர்களுக்கு பணிவடை செய்ய வேண்டும்.மரியாதையோடு நடத்த வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் அபூதர்(ரழி) அவர்களிடம்,"கீராக் நாணயம் பயன் படுத்த கூடிய நாட்டை வெற்றி பெறுவீர்கள்.அந்நாட்டை நீங்கள் வெற்றி கொண்டால் அந்நாட்டு(எகிப்து) மக்களுக்கு நீங்கள் மரியாதை செய்யுங்கள்.ஏனென்றால் அந்நாடானது என் தாயும்,என் மகனி தாயும் பிறந்த நாடாகும்."என்று கூறினார்கள்.
நபியவர்கள் தன் தாய் பிறந்த நாட்டிற்கே இவ்வளவு மரியாதை செலுத்திகிறார்கள்.தன் பெற்றோர்க்கு எவ்வளவு மறியாதை செய்திருப்பார்கள்.இதே போன்ற் நாமும் நமது பெற்றோருக்கு மறியாதை செய்ய வேண்டும்.
2.பெற்றோரின் அருமையை பிறருக்கு எடுத்து கூற வேண்டும்.பிள்ளைகளுக்கும்,மருமகள்களுக்கும் அவர்களைப் பற்றி எடுத்து கூற வேண்டும்.உங்கள் பெற்றோர்களின் உண்ணதங்களை உணர்த்தினாலே அப்பெற்றோர்களுக்கு மதிப்பும்,மரியாதையும் தானாக வந்து விடும்.
ஒரு மகன் அழகான வீட்டை கட்டி அதில் தன் பெற்றோர்களை இருக்கச் செய்து விட்டு வெளி நாட்டிற்கு தன் மனைவி, குழந்தையுடன் சென்று விடுகின்றான்.பின் சில நாட்கள் கழித்து குடும்பத்துடம் வரும் பொழுது.விகாரமான தோட்டத்தில் வீட்டு வாசலில் அனைத்து சாமாங்களையும் வைத்துக் கொண்டு வெற்றிலையை புரிச் புரிச் என்று துப்பிக் கொண்டிருந்தார் அம்மகனின் தந்தை.அதைக் கண்ட பேரன்,"இவ்வளவு அழகான வீட்டை கட்டி விட்டு ஒரு அசிங்கத்தை வீட்டு வாசலில் வைத்திருக்கிரீர்களே.இதை எங்காவது கொண்டு போய் விட வேண்டியது தானே!" என்று தன் தாத்தாவை பற்றி தன் தந்தையிடம் கூறினான்.
தன் பிள்ளைகளுக்கு தன் பெற்றோரைப் பற்றி எடுத்து கூராததன் காரணமாக வந்த விளைவு தான் இது.அனைவருக்கும் மன கஷ்டம்.இதை தடுப்பதற்காகவே தன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பற்றி தன் மனைவி,பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களின் அருமையை அழகுற எடுத்துரைக்க வேண்டும்.
அத்தந்தை தன் மகனிடம் தாத்தாவைப் பற்றி,"மகனே!நீ பிறப்பதற்கு அல்லாஹ்விற்கு அடுத்த படியாக நான் காரணம்.நான் பிறப்பதற்கு என் தந்தை உன் தாத்தான் காரணம்.அவர் என்னை படிக்க வைத்து வெளிநாடு அனுப்பி வைத்ததும் அவர் தான்.இவர் மிகவும் மரியாதைக் குறியவர்.நீயும் அவரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்."என்று எடுத்துக் கூற தவறி விட்டார்.
   "அல்லாஹ்வின் பொருத்தம் தந்தையின் பொருத்ததில் இருக்கிறது.
  அல்லாஹ்வின் வருத்தம் தந்தையின் வருத்தத்தில் இருக்கின்றது"      அல்-குர்ஆன்
3.முதியோர் இல்லங்களிலும்,பள்ளிவாசல் மற்றும் சத்திரங்களில் விடப்படும் வயது முதிர்ந்த தன் பெற்றோர்களின் நிலை நாளை நமக்கு ஏற்பட்டால் நம் நிலை என்னவாகும் என்று யோசிக்க வேண்டும்.அவ்வாறு யோசித்தாலே நாம் நமது பெற்றோர்களை நங்கு கவனித்து விடுவோம்.
4.வயது முதிர்ந்த பெற்றோர்களும் தங்கள் நிலை அறிந்து அதிகம் பேசாமல் இருக்க வேண்டும்.குடும்ப விசயங்களில் தங்களை ஆலோசிக்கும் வரை தானே சென்று தலையிடுவது,வீணான பேச்சுக்களில் ஈடுபடுவது,மற்றவர் பேசி கொண்டிருக்க தன் பேச்சை அங்கு திணிக்க கூடாது.அதையும் மீறி அவர்கள் செய்வார்களானால் சிறியயவர்களாகிய நாம் சற்று புரிந்து விட்டு கொடுத்து போக வேண்டும்.அவர்களை சீ என்று கூட சொல்லக் கூடாது.அவ்விடத்தில் நாம் பொறுமையை கையாள வேண்டும்.
ஒரு தாய் தன் பிள்ளைக்கு இரண்டு வருடம் முழுமையாக தரக் கூடிய பாலானது அப்பிள்ளைக்கு 40 வயது வரை சக்தியை கொடுக்கும்.அப்படி பட்ட நற்செயலை செய்யும் தன் தாயை உதாசீன படுத்துவது தவறு என் புரிந்து கொள்ள வேண்டும்.
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவேநீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
                       "தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கின்றது" அல்-குர்ஆன்
 وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ ۖ أَفَلَا يَعْقِلُونَ
36:68 மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
முதுமையில் நம் பெற்றோர்கள்.புத்தி பேதலித்தது போன்று நடந்து கொள்வார்கள்.எனவே அவர்களின் நிலையை அறிந்து செயல் பட வேண்டும்.
முதியோர்கள் தங்களுடைய கடைசி காலங்களில் இறைவனை வணங்குவதிலும்,திக்ரு செய்வதிலும் , குர்ஆன் ஓதுவதிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் தானாகவே தன் பிள்ளைகளிடமிருந்து அன்பும் மரியாதையும் வந்து விடும்.
5.முதியவர்கள் அனைவரும் சேமிப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.தன் அனைத்து சொத்துகளையும் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டால் அவர்கள் உங்களை ஓரம் கட்டி விடுவார்கள்.உங்களிடமும் இருப்பு இருக்குமானால் மரியாதையும் இருக்கும். நீங்கள் இறந்த பிறகு உங்கள் சொத்துகளை  முறைப்படி எப்படி பிரித்துக் கொள்வது என்று அல்லாஹ் கூறி இருக்கின்றான்.அதன் படி பிரித்துக் கொள்வார்கள்.அது வரையிலும் உங்களிடமும் சில சொத்துக்கள் இருப்பதுதான் நல்லது.
நபியவர்கள் தர்மத்தைப் பற்றிக் கூறும் போது,உமர்(ரழி)அவர்கள் தபூக் யுத்தத்தில் கிடைத்த தோட்டத்தை கொடுக்க முன் வந்த போது நபியவர்கள்,"அசலை வைத்துக் கொண்டு இலாபத்தை தர்மம் செய்யுங்கள்."என்று கூறினார்கள்.கையிருப்பு மிக அவசியம்.
நபி(ஸல்) அவர்கள்,"வீட்டில் முதியவர்கள்,ஏழாதவர்கள் இருந்தால் இறைவன் இரணத்தை இறக்கி வைப்பான்." என்று கூறினார்கள்.
எனவே இக்கால இளைஞர்கள் தன் பெற்றோரின் தரம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.நீங்கள் சம்பாதிக்கும் பொருளிலிருந்து அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும்.அவர்களிடம் வெறுப்பு காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும்.மாறாக அன்பு காட்டி,மரியாதை செலுத்தி அறவணைப் போடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza